மதுரை: மதுரை மாவட்ட குழந்தைகள் இல்லங்களில் சேர்க்கும் குழந்தைகளுக்கு முதல் சேர்க்கையின் போதே வரன்முறை ஆணை அவசியம் பெற வேண்டும் என குழந்தைகள் நலக்குழு தெரிவித்துள்ளது.அரசு, சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு பெற்ற மதுரை அரசு, தனியார் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள், இளைஞர்கள் நீதி சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறுவர். இவர்களது பாதுகாப்பு, பராமரிப்பு கருதி சேர்க்கும் போதே வரன்முறை ஆணை பெற வேண்டும்.புதிதாக சேர்க்கும் குழந்தைகளின் குடும்ப பின்னணியை கள, சமூக பணியாளர்கள் ஆய்வு செய்வர். இல்ல நிர்வாக இயக்குனர் ஒப்புதல் கடிதத்துடன் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நலக்குழுவில் நேரில் ஆஜராக வேண்டும்குழந்தைகள் இல்லங்களில் புதிய குழந்தைகள் சேர்க்க, நீக்கல் பதிவேடு பராமரித்து, ஒன்றை குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்வின் போது பதிவேடுகள் சரி பார்க்கப்படும். ஆணையின்றி குழந்தைகளை தங்க வைத்திருந்தால் துறை, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, ஆணை பெறாத குழந்தைகள் டிச.,15க்குள் பெறலாம்என குழு தலைவர் விஜயசரவணன், உறுப்பினர்கள் பாண்டியராஜா, சாந்தி, சண்முகம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE