கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒட்டக்கோவில்பட்டியில் அறுவடை செய்ய வேண்டிய நெல் பயிர்கள் மழைக்கு சாய்ந்து முளைக்க ஆரம்பித்துள்ளதால்வேளாண் துறை அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இக்கிராமத்தில் மழை நீரை கொண்டு 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரு வாரமாக பெய்தமழைக்கு சரஸ்வதி, பகவான், செல்வம் உள்ளிட்ட விவசாயிகளின் நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்தது. வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றவும், பயிர்களை விளைவிக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.விவசாயி சரஸ்வதி கூறுகையில், ''கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்த நிலையில் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து விட்டது. கதிர் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் நிலத்தில் சாய்ந்த நெல் கதிர்கள் முளைக்க ஆரம்பித்துள்ளதால் செய்வதறியாது திகைக்கிறோம். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE