தமிழ்நாடு

ண மாவட்டத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுகிறது மூலிகை மருத்துவத்தால் குணமாக்கலாம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
தேனி: மாவட்டத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவிவருகிறது. இது குணமடைய மூலிகை மருந்து நல்ல பலன் தருவதால் அதனை வளர்ப்போர் அச்சமடைய வேண்டாம் என கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.தேனி மாவட்டம் போடி, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுகிறது. அதனால் அவற்றின் உடலில் சிறு, சிறு கட்டிகளாகவும், மூக்கில் சளி,

தேனி: மாவட்டத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவிவருகிறது. இது குணமடைய மூலிகை மருந்து நல்ல பலன் தருவதால் அதனை வளர்ப்போர் அச்சமடைய வேண்டாம் என கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுகிறது. அதனால் அவற்றின் உடலில் சிறு, சிறு கட்டிகளாகவும், மூக்கில் சளி, கண்களில் நீர் வடிதல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. போதிய அளவு தீவனம் சாப்பிடாது.

பால் உற்பத்தி குறையும். இது இலம்பி எனும் தோல்நோய். வைரஸ் கிருமியால் கொசு, ஈ, உன்னிக்கடிகளால் பரவும். தடுப்பூசி இல்லை. தங்களின் வாழ்வாதாரமான மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.சுகாதாரம் முக்கியம்

கால்நடைபராமரிப்புத்துறை நோய் புலனாய்வுப்பிரிவு அதிகாரி கூறுகையில், ''இந்த நோய் முதன்முறையாக பரவுவதால் பண்ணை அளவிலேயே பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம். இது ஒருவகை அம்மை நோய்.
கால்நடை வளர்ப்போர் மாட்டு கொட்டகை, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். அதனால் பரவாமல் தடுக்கலாம். பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி தீவனம், தண்ணீர் வைக்க வேண்டும். கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட்டால் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து அடுத்த மாட்டை தொட வேண்டும். மூலிகை மருந்து

வெற்றிலை 10, மிளகு 10, கல் உப்பு 10, தேவையான அளவு வெல்லம் சேர்த்து அரைத்து நாக்கில் தடவிவிட வேண்டும். 2 நாட்களுக்கு 3 முறை வழங்க வேண்டும். வெளிப்பூச்சு மருந்தாக குப்பை மேனி இலை,வேப்பிலை, துளசி, மருதாணி இலையுடன் தலா ஒரு கைபிடியுடன் மஞ்சள் 20 கிராம், பூண்டு 10 பல் அரைத்து,
வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 500 மி.கி. கொதிக்க வைத்து சூடு ஆறியபின் காயங்களை சுத்தப்படுத்தி பின் மருந்து தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் குணமடையும். அச்சமடைய வேண்டாம். போடி, பெரியகுளம் தாலுகாக்களில் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது ,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X