கம்பம்: கம்பம் அருகே சுருளி அருவி ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இருமுடி செலுத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல 50 வயது மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங்கிலும் சிரமம் உள்ளது. புண்ணிய தலமான சுருளி அருவியில் ஐயப்பன் கோயில் உள்ளது. வழக்கம்போல இந்தாண்டு மாலை அணிந்துள்ள ஐயப்ப பக்தர்கள் இக்கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, டிரஸ்டி பொன்காட்சிகண்ணன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE