தேனி: தேனியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் 8 மாதங்களுக்கு பின் நேற்று 'ஜூம் ஆப்' மூலம் நடத்தப்பட்டது. 8 வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார்.விவசாயிகள் பேசியதாவது:பாண்டியன், மாவட்ட விவசாய சங்க தலைவர்: மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் இன்றி திறந்தவெளி கொள்முதல் செய்வதால் மழையால் மகசூல் பாதிக்கிறது. ஈரமாவதால் எடைபோடமறுக்கின்றனர். 50 நிரந்தர கொள்முதல் நிலையம் அமைப்பதாக அரசு கூறியது. 2016-2017 ல் நிலவரி ரத்து செய்துள்ளது. கொரோனாவால் விவசாயிகள் பயிர்கடனை ரத்து செய்ய வேண்டும்.கண்ணன், விவசாய சங்க செயலாளர்: நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கரும்பு நிலுவை தொகை வழங்க ஆலை நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். மலைமாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதில் வனத்துறை தொடர்ந்து இடையூறு செய்கின்றனர்.சேதுராமன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்: நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. தவறுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். தற்போது 3 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.வெற்றிலைக்கு காப்பீடு வெற்றிலை விவசாயிகள்: ஜெயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் வெற்றிலை அதிகளவில் சாகுபடியாகிறது. இதற்கு பயிர்காப்பீடு,பயிர்க்கடன் கிடைப்பது இல்லை. மானியம் வழங்க வேண்டும்.பாண்டி, தோட்டக்கலை துணை இயக்குனர்: சாகுபடி பரப்பளவு அதிகம் இருந்தால்தான் காப்பீடு செய்ய முடியும். மதிப்பு கூட்டிய பொருளாக மாற்ற தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் முயற்சிகள் நடக்கிறது. சலிமா , கொடுவிலார்பட்டி: விலை கிடைக்காமல் வெண்டைக்காய், மல்லி தழை ஆற்றில் கொட்டுகின்றனர்.தோட்டக்கலை துணை இயக்குனர்: விவசாயிகள் கொட்டவில்லை. முத்திய காய்களை வியாபாரிகள் கொட்டியுள்ளனர்.அம்சராஜன், கோம்பை : தேவாரம்,கோம்பையில் மக்னா யானை பயிர்களை சேதப்படுத்தி 11 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதனை பிடிக்க வேண்டும். இங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும். கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஷ்ணுராம் மேத்தி தொகுத்து வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE