பொது செய்தி

இந்தியா

'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ''பாரத் பெட்ரோலியத்தின் சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு, மானியம் தொடர்ந்து வழங்கப்படும்,'' என, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.நம் நாட்டில் அரசின் சார்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர்களை மானியத்துடன் பொதுமக்களுக்கு வினியோகம்

புதுடில்லி: ''பாரத் பெட்ரோலியத்தின் சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு, மானியம் தொடர்ந்து வழங்கப்படும்,'' என, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.latest tamil newsநம் நாட்டில் அரசின் சார்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர்களை மானியத்துடன் பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.இவற்றில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் சமையல் காஸ் மானியம் குறித்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு சமையல் காஸ் மானியம் வழங்குவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், 14.2 கிலோ எடையுள்ள, 12 சமையல் காஸ் சிலிண்டர்கள் ஆண்டு தோறும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, அரசு தரப்பிலான மானிய தொகை வாடிக்கை யாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.


latest tamil newsஅவர்களுக்கு சிலிண்டர் வினியோகத்திற்கு முன்பாகவே மானியம், 'டிஜிட்டல்' முறையில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.நாட்டில் உள்ள, 28.5 கோடி சமையல் காஸ் இணைப்புகளில், 7.3 கோடி இணைப்புகள், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமானவை.இதன் வாடிக்கையாளர்களுக்கு அரசு தரப்பில் நேரடியாக மானியத்தை வழங்குவதால், நிறுவனத்தின் உரிமையாளர் குறித்து, பொதுமக்கள் கவலைப்படை தேவைஇல்லை.பாரத் சமையல் காஸ் வாடிக்கையாளர்களை, இண்டேன் அல்லது எச்.பி., நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துகொள்ளும்படி கூறுவதற்கான வாய்ப்பும், தற்போதைய சூழ்நிலையில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
28-நவ-202015:53:35 IST Report Abuse
Sami Sam 5 மாதங்களாக மானியம் கிடைக்கவில்லை
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
28-நவ-202015:35:12 IST Report Abuse
Raman Muthuswamy All the Best to the Petro Minister SHRI DHARMENDRA PRADHAN for resuming the Subsidy on the LPG Refills Our sincere best wishes & GODSPEED
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-நவ-202012:41:54 IST Report Abuse
Ramesh Sargam எனக்கு முன்னறிவிப்பு இல்லாமலே மூன்று வருடங்களாக மானியம் கிடைப்பதில்லை. பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் அளித்தும், செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். நானும் 'சீ சீ இந்த பழம் புளிக்கும்' என்பதுபோல், மானியம் கேட்பதையே விட்டுவிட்டேன். அரசு நல்ல திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால், ஒருசில காஸ் ஏஜெண்சி முதலாளிகளால் மக்களுக்கு அரசு அறிவிக்கும் பயனுள்ள நல்ல திட்டங்கள் சேர்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X