பொது செய்தி

தமிழ்நாடு

காணொளி காட்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
சிவகங்கை: காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. 12 உதவி வேளாண் அலுவலகங்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.பின் அவர் தெரிவித்ததாவது: அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண்

சிவகங்கை: காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. 12 உதவி வேளாண் அலுவலகங்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.பின் அவர் தெரிவித்ததாவது: அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலகங்களில் நவ., 30 முதல் டிச., 10 வரை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் விவசாயிகள் பயிர்கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்துக்கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போதிய மழை நீர் சேமிக்க முடியவில்லை என புகார் வந்துள்ளது. வருவாய்துறை, வேளாண் துறை இணைந்து ஆலோசனை நடத்தி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடங்கல் சான்று பெற தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் பொது சேவை மையங்களிலும், விவசாயிகளின் அலைபேசியிலும் இணையதளம் மூலம் சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு வைகை, பெரியாறு பாசனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் முழுமையாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் தடையின்றி கிடைக்க மின்வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., லதா, வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், சருகனியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகேசன், முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X