திருப்புவனம்: திருப்புவனத்தில் நிவர் புயல் எதிரொலியாக நள்ளிரவில் மழை கொட்டி தீர்த்தது.வடகிழக்கு பருவ மழை செப்டம்பரில் தொடங்கினாலும் போதிய அளவு திருப்புவனத்தில் மழை இல்லை, வைகை ஆற்று பாசனத்தை நம்பியுள்ள மாரநாடு, பிரமனுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கண்மாய்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.தற்போதுள்ள மழைத்தண்ணீர் பத்து நாட்களுக்கு கூட பாசனத்திற்கு உதவாது என விவசாயிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. நிவர் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்புவனத்தில் மழை பெய்தது.மழை காரணமாக வைகை ஆற்றுப்படுகையில் ஈரப்பதம் உள்ளதால் அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE