பொது செய்தி

இந்தியா

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது: சீரம் நிறுவனம்

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், சிறந்த பலனை அளிக்க கூடியதாகவும் இருக்கும்' என, இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.
Oxford, CoronaVaccine, Serum, ஆக்ஸ்போர்டு, தடுப்பூசி, பாதுகாப்பானது, சீரம் நிறுவனம்

புதுடில்லி: 'ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், சிறந்த பலனை அளிக்க கூடியதாகவும் இருக்கும்' என, இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பு மருந்தை, நம் நாட்டில் சோதனை செய்து, விநியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, இந்திய சீரம் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து, 90 சதவீதம் பலன் அளிக்க கூடியது என, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் உற்பத்தியில் சிறிய பிழை நிகழந்ததாக, ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் தெரிவித்தன. இது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இது குறித்து, இந்திய சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது. சிறந்த பலன் அளிக்க கூடியது. இது மிகவும் குறைந்தபட்சமாக, 60 - 70 சதவீதம் பலன் அளிக்க கூடியது. மக்கள் பொறுமை காக்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை.
பரிசோதனையின் போது, பல்வேறு வயதினருக்கு, பல்வேறு விதமான அளவில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். இதனால், மருந்தின் செயல் திறனில் லேசான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்த தடுப்பு மருந்தின் பரிசோதனை, நெறிமுறைகளுக்கு உட்பட்டு, நம் நாட்டில் சிக்கலின்றி நடைபெற்று வருகிறது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




'ஸ்புட்னிக் -5' தயாரிக்க ஒப்பந்தம்


ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - 5' என்ற கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை, 40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு சமீபத்தில் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்து, 91.4 சதவீதம் பலன் அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்த ஆண்டு முதல், ஆண்டுக்கு 10 கோடி டோஸ், 'ஸ்புட்னிக் - 5' மருந்து தயாரிக்க, ரஷ்ய நேரடி முதலீடு நிதியத்துடன், தெலுங்கானாவின், ஐதராபாத்தை சேர்ந்த, ஹெட்டரோ பயோபார்மா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுஉள்ளது.


latest tamil news




சர்வதேச பரிசோதனை


ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்தின் உற்பத்தி பிழை குறித்து, ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி பாஸ்கல் சாரியாட் கூறியதாவது: இந்த குழப்பத்தை போக்குவதற்காக, சர்வதேச அளவிலான மற்றொரு பரிசோதனையை செய்ய முடிவு செய்துள்ளோம். இது மிக குறைவானவர்கள் மீது செய்யப்பட உள்ளதால், அதிக கால அவகாசம் தேவைப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-நவ-202020:29:24 IST Report Abuse
spr இந்தியா மருந்துகளைத் தயாரிப்பதில் முன்னிலை வகிப்பதாகவும் அதன் மூலம் அன்னியச் செலாவணியால் இந்தியாவுக்கு நிதி வருவதாகவும் நம் பிரதமர் உட்பட அனைத்து பெரியவர்களும் பெருமையாகக் கூறிக் கொண்டார்கள் உண்மை என்னவென்றால் இந்த மருந்துகளை பரிசோதித்து அதன் உயிர் காக்கும் நிலையை உறுதிப்படுத்தும் வரையில் சோதனை செய்து பார்க்க :கினியா பன்றிகள்" என நம்மை பயன்படுத்தவே இந்நிறுவனங்கள் இங்கே நிறுவப்படுகின்றன இவை பெரும்பாலும் படிப்பறிவு குறைவான இந்திய பகுதிகளிலேயோ அதன் அருகிலேயே நிறுவப்படும் அங்குள்ள மக்கள் மேல் பரிசோதிக்கப்படும் உறுதிப்படுத்தப்பட்டவுடன் இதன் அனைத்துக் காப்புரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டாடும் பணத்தை அள்ளும் பிழைத்தால் நமக்கு லாபம் செத்தால் பத்தோடு பதினொன்று அவ்வளவே ஆனால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் உலகம் உய்ய நம்முயிரைத் தியாகம் செய்கிறோம் என்று
Rate this:
Cancel
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-நவ-202011:41:47 IST Report Abuse
vbs manian ராபர்ட் எப். கென்னடி விக்கிப்பீடியா பதிவு. தற்போது வரும் காரோண தடுப்பு ஊசிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவைகள் எம் ஆர் என் ஏ தடுப்பூசிகள் என அழைக்க படுகின்றன. இவைகளை மனிதர்கள் பயன்படுத்தினால் இவை நேரே ஒருவரின் மரபணுவில் மற்ற முடியாத மாற்றங்களை செய்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X