பொது செய்தி

தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ச.ம.க., மனு

Added : நவ 28, 2020
Share
Advertisement
ஈரோடு: அந்தியூரில் சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அண்ணாமடுவு ரவுண்டானா வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் சாலை அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

ஈரோடு: அந்தியூரில் சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அண்ணாமடுவு ரவுண்டானா வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் சாலை அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்தியூர் பேரூராட்சி, நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து, பேரூராட்சிக்கான இடங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்டிலும் இட நெருக்கடி உள்ளதால், பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X