சேலம்: முன்னாள் படை வீரர், தங்களை பற்றிய விபரங்களை, மின் ஆளுமை மூலம், பதிவேற்றம் செய்ய, உரிய ஆவணங்களுடன், தாலுகா அலுவலகத்தை அணுகலாம்.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் படை வீரர், அவர்களை சார்ந்தோர் விபரம், மின் ஆளுமை மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனால், பதிவேற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியோர், படை வீரர் நல அலுவலகம் மூலம், சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில், பதிவேற்றம் செய்யலாம். அதற்கு, மார்பளவு போட்டோ, பென்ஷன் அரசாணை, டிஸ்சார்ஜ் புத்தகம், முன்னாள் படைவீரர் இறப்பு சான்று, ஆதார் அட்டை நகல், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி அவசியம். இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், டிச., 1, 2, 3, கெங்கவல்லியில், 8, 9, 10, 11, மேட்டூரில், 16, 17, 18, ஓமலூரில், 22, 23, 24, 29, 30, பெத்தநாயக்கன்பாளையத்தில், டிச., 31, சங்ககிரியில், ஜன., 4, 5, 6, வாழப்பாடியில், 12, 13, ஏற்காட்டில், 19, காடையாம்பட்டியில், 20, 21 என, குறிப்பிட்ட நாளில் சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதுதவிர, சேலம், தெற்கு, மேற்கு தாலுகா அலுவலகத்தில், அனைத்து வேலை நாளும் பதிவேற்றம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE