பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கிணற்றை புனரமைக்க பெயர் பதிவு செய்ய அழைப்பு

Added : நவ 28, 2020
Share
Advertisement
சேலம்: சிதிலமாகி வரும் விவசாய கிணறுகளை புனரமைக்க, பெயர் பதிவு செய்யும்படி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், சிதிலமாகி வரும் விவசாய கிணறுகளை புனரமைத்து தரக்கோரி, குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் முறையிட்டனர். அப்போது, கலெக்டர் ராமன், சேதமான கிணறுகளை கணக்கெடுத்து புதுப்பிக்கப்படும் எனக்கூறினர். இதையடுத்து, வேளாண் பொறியியல் துறை

சேலம்: சிதிலமாகி வரும் விவசாய கிணறுகளை புனரமைக்க, பெயர் பதிவு செய்யும்படி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில், சிதிலமாகி வரும் விவசாய கிணறுகளை புனரமைத்து தரக்கோரி, குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் முறையிட்டனர். அப்போது, கலெக்டர் ராமன், சேதமான கிணறுகளை கணக்கெடுத்து புதுப்பிக்கப்படும் எனக்கூறினர். இதையடுத்து, வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாய கிணறுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண் பொறியியல் பிரிவு செயற்பொறியாளர் பாலாஜி கூறியதாவது: மாவட்டத்தில், முதல் கட்டமாக, 140 கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த திட்ட மதிப்பீடு, தலைமை பொறியாளருக்கு சமர்ப்பிக்கப்படும். அவர் அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு பெற்று, பணியை தொடங்க காலதாமதமாகும். அதனால், அறிக்கையை, கலெக்டருக்கும் தாக்கல் செய்து, 100 நாள் வேலை திட்டத்தில், கிணறுகளை சீரமைக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ராமன் கூறுகையில், ''100 நாள் வேலை திட்ட நிதியில், கிணறுகளை சீரமைப்பது குறித்து, பரிசீலனை நடக்கிறது. அதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம், கிணற்றை சீரமைக்க மனு கொடுத்து, பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X