வளம் சார் வங்கி கடன் ரூ.7976 கோடி: 2021 - 22க்கு நபார்டு நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளம் சார் வங்கி கடன் ரூ.7976 கோடி: 2021 - 22க்கு 'நபார்டு' நிர்ணயம்

Added : நவ 28, 2020
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், 2021 - 22ல், வளம் சார்ந்த மொத்த வங்கி கடன், 7976.82 கோடி ரூபாயாக, 'நபார்டு' நிர்ணயித்துள்ளது.சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 'நபார்டு' வங்கி சார்பில், 2021 - 22க்கான, வளம் சார்ந்த வங்கி கடன் திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. அதை, கலெக்டர் ராமன் வெளியிட்டு கூறியதாவது: வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, வங்கிகள், நீண்டகால கடன்கள் வழங்க வேண்டும். விவசாயத்தில்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 2021 - 22ல், வளம் சார்ந்த மொத்த வங்கி கடன், 7976.82 கோடி ரூபாயாக, 'நபார்டு' நிர்ணயித்துள்ளது.


சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 'நபார்டு' வங்கி சார்பில், 2021 - 22க்கான, வளம் சார்ந்த வங்கி கடன் திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. அதை, கலெக்டர் ராமன் வெளியிட்டு கூறியதாவது: வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, வங்கிகள், நீண்டகால கடன்கள் வழங்க வேண்டும். விவசாயத்தில் இழப்பை ஈடுசெய்ய, பயிர் கடன் திட்டத்தில், விவசாயிகளை இணைக்க, வங்கிகள் நடவடிக்கை தேவை. சிறு, குறு விவசாயிகள், தொழில் முனைவோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பெண்கள், விவசாய உற்பத்தி நிறுவன கடன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நபார்டு உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி கூறுகையில், ''வளம் சார்ந்த மொத்த கடன் தொகை, நடப்பாண்டை விட, 4.97 சதவீதம் அதிகம். அதன்படி, 7976.82 கோடி ரூபாயாகும். அதில், விவசாய வங்கி கடன், 6004.76 கோடி ரூபாய். சிறு, குறு தொழில்களுக்கு, 920.90 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில், மூலதனம் உருவாக்கும் விதமாக, வங்கி கடன் அமையும். அதற்காக, அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் அமல்படுத்துவது அவசியம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X