ஓமலூர்: மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓமலூர், பாகல்பட்டி, ராமனூர் காலனியை சேர்ந்த, தங்கவேல் மனைவி வள்ளி, 40. இவரது மகள் திவ்யபாரதி, 22. இவர், நான்கு மாதங்களுக்கு முன், ஓமலூர், செட்டியப்பனூர் காலனியை சேர்ந்த, சடையன் மகன் ஜெகதீஷ், 25, என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம், திவ்யபாரதி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில், வள்ளி புகார் அளித்தார். அதில், 'என்னிடம், 50 ஆயிரம் ரூபாய், 2 பவுன் தங்க சங்கிலி வாங்கி வருமாறு, திவ்யபாரதியிடம், ஜெகதீஷ் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த வரதட்சணை கொடுமையால், மகள் தற்கொலை செய்து கொண்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணமான நான்கு மாதங்களில், பெண் இறந்ததால், மேட்டூர் ஆர்.டி.ஓ., சரவணன், ஓமலூர் டி.எஸ்.பி., சோமசுந்தரம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE