பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழாவுக்கு அகல் விளக்கு விற்பனை ஜோர்

Added : நவ 28, 2020
Share
Advertisement
அரூர்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விருத்தாசலத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள், அரூரில் விற்பனைக்கு வந்துள்ளன. கார்த்திகை தீப திருவிழா நாளை நடக்கிறது. அன்றைய நாளில் மக்கள், வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவர். இதையொட்டி, அரூரில், பல வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், மாரியம்மன் கோவில் தெருவில், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அகல்

அரூர்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விருத்தாசலத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள், அரூரில் விற்பனைக்கு வந்துள்ளன. கார்த்திகை தீப திருவிழா நாளை நடக்கிறது. அன்றைய நாளில் மக்கள், வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவர். இதையொட்டி, அரூரில், பல வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், மாரியம்மன் கோவில் தெருவில், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, அகல் விளக்கு விற்பனையாளர் பழனியம்மாள் கூறுகையில், ''விருத்தாசலத்தில் தயாரிக்கப்பட்ட, அகல் விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். ஒரு அகல் விளக்கு, அதன் அளவு மற்றும் மாடல்களை பொறுத்து, ஒரு ரூபாய் முதல், இரண்டு ரூபாய் வரை விற்கிறோம். தீப திருவிழாவுக்காக, பெண்கள் பலர், ஆர்வத்துடன், அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X