பொது செய்தி

தமிழ்நாடு

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால், எட்டு மாதங்களுக்கு பின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை காப்பீடு செய்ய, நவ.,30 கடைசி நாளாகும். பாலக்கோடு தாலுகா,

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால், எட்டு மாதங்களுக்கு பின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை காப்பீடு செய்ய, நவ.,30 கடைசி நாளாகும். பாலக்கோடு தாலுகா, எண்ணேகொல்புதூர் - தும்பலஹள்ளி அணை இணைப்பு கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஹள்ளியில் நிலங்களை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, தனியார் நில எடுப்புப் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில எடுப்புக்கு, அப்பகுதி மக்கள் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், கட்டாய நில எடுப்பு சட்டத்தின் மூலம் எடுக்க, கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். தக்காளி விவசாயிகள், பயன்பெறும் வகையில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அந்தந்த வட்டார பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பேசினர். அதற்கு வேளாண் அதிகாரிகள் பதில் அளித்தனர். இதில், டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, அரூர் சப்- கலெக்டர் பிரதாப், வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா, வேளாண் அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X