பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது கொலை மிரட்டல் புகார்

Added : நவ 28, 2020
Share
Advertisement
தர்மபுரி: கொலை மிரட்டல் விடுத்த அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், காவிப்படை நிறுவனர், தன் மகன்களுடன் புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலையை சேர்ந்தவர், ராஜசேகரன், 42; அகில இந்திய பொய்கை காவிப்படை நிறுவனர். இவர், தீர்த்தமலையில் ஆசிரமம் வைத்து, மக்களுக்கு, சித்த வைத்தியம், நோய்களை மனோதத்துவம் மூலம்

தர்மபுரி: கொலை மிரட்டல் விடுத்த அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், காவிப்படை நிறுவனர், தன் மகன்களுடன் புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலையை சேர்ந்தவர், ராஜசேகரன், 42; அகில இந்திய பொய்கை காவிப்படை நிறுவனர். இவர், தீர்த்தமலையில் ஆசிரமம் வைத்து, மக்களுக்கு, சித்த வைத்தியம், நோய்களை மனோதத்துவம் மூலம் குணப்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் தன் மகன்களான, கணேஷ்குமார், 21, சுதர்சன், 13, ஆகியோருடன், நேற்று தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரூர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்குமார், அவரது அடியாட்களை ஏவி, கடந்த சில வாரங்களாக என்னையும், என் குடும்பத்தினர் மற்றும் என் தொண்டர்களையும் பின்தொடர்ந்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்து வருகிறார். அவர்களிடமிருந்து, எங்களை பாதுகாத்து, இதில், தொடர்புடைய அனைவரின் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X