தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவன் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன. பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹா லிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று மாலை, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் சிலர் மட்டுமே, பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டனர். இதேபோல், தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்திக்கு அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE