பொது செய்தி

தமிழ்நாடு

'மழை வந்தால் மட்டும் அரசுக்கு வரும் ஞானோதயம்'

Added : நவ 28, 2020
Share
Advertisement
வேலூர்: ''மழை வந்தால் மட்டும், அரசுக்கு வரும் ஞானோதயம் வருகிறது,'' என, துரைமுருகன் கூறினார்.'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டவர்கள், வேலூர் அருகே, கொணவட்டம் அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எந்த புயல் பாதிப்புக்கும் மக்களை பார்க்க செல்லாத

வேலூர்: ''மழை வந்தால் மட்டும், அரசுக்கு வரும் ஞானோதயம் வருகிறது,'' என, துரைமுருகன் கூறினார்.


'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டவர்கள், வேலூர் அருகே, கொணவட்டம் அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எந்த புயல் பாதிப்புக்கும் மக்களை பார்க்க செல்லாத முதல்வர் பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தல் காரணமாகவே, தற்போது கடலூர் சென்றார். மழை வந்தால் மட்டும், இந்த அரசுக்கு ஞானோதயம் வருகிறது. அமைச்சர்கள் அனைவரும், பொய் பேசுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மோர்த்தானா அணையை, தூர் வாராததே, வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம். திடீர் நகரில், பாலம் கட்டாததால்தான், வெள்ளம் வந்துள்ளது. புயல் பாதித்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சமீபத்தில் சென்னை வந்த, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்துக்கு அதிக நிதி கொடுப்பதாக கூறியிருந்தார். தற்போது புயல் சேதத்துக்கு, எவ்வளவு நிதி கொடுக்கிறார் என பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X