திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், 58 ஏரிகள், நூறு சதவீதம் நிரம்பின.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக, 697 ஏரிகள் உள்ளன. இதில், 13 ஏரிகள், நூறு சதவீதம் நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கும் மேல், 24 ஏரிகளும், 50 சதவீதத்துக்கும் மேல், 109 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு மேல், 251 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு கீழ், 300 ஏரிகளும், நிரம்பி உள்ளன. அதே போல், ஊர வளர்ச்சி துறையில் கட்டுப்பாட்டில் உள்ள, 1,257 ஏரிகள் உள்ளன. இதில், 45 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கும் மேல், 213 ஏரிகளும், 50 சதவீதத்துக்கும் மேல், 337 ஏரிகளும், 26 சதவீதத்துக்கும் மேல், 239 ஏரிகளும், மற்ற ஏரிகள், 25 சதவீதத்துக்கும் கீழ், நிரம்பி உள்ளன. ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், ஏரிக்கு அருகிலுள்ள விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE