பொது செய்தி

தமிழ்நாடு

நாளை கார்த்திகை தீப திருநாள்: மண் விளக்குகள் விற்பனை தீவிரம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
கரூர்: கார்த்திகை தீப திருநாளையொட்டி, கரூரில் மண் விளக்குகள், விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை, கார்த்திகை தீப திருநாள் நடக்கிறது. அப்போது, வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றுவது வழக்கம். கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், மண் விளக்குகளை அதிகளவில் தயாரிக்க முடியவில்லை. மேலும், களிமண்ணும் கிடைப்பது

கரூர்: கார்த்திகை தீப திருநாளையொட்டி, கரூரில் மண் விளக்குகள், விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை, கார்த்திகை தீப திருநாள் நடக்கிறது. அப்போது, வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றுவது வழக்கம். கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், மண் விளக்குகளை அதிகளவில் தயாரிக்க முடியவில்லை. மேலும், களிமண்ணும் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால், மண் விளக்குகளில் தீபம் ஏற்றுவதுதான், ஐதீகம் என்பதால் பெரும் சிரமத்துடன், உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் கூறியதாவது: பருவ மழை, களிமண் தட்டுப்பாடு காரணமாக, மண் விளக்குகள் குறைவாகத்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், சிலிகான் விளக்குகள், பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்து விட்டன. பல கோவில்களில், விளக்கு ஏற்ற தடை விதித்துள்ளனர். இதனால், மண் விளக்குகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. நடப்பாண்டு மழை காரணமாக, உற்பத்தியும் குறைந்து விட்டது. தற்போது, ஒரு சிறிய விளக்கு, இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரையிலும், பெரிய விளக்கு, 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X