ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.51 லட்சம் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.51 லட்சம் பறிமுதல்

Added : நவ 28, 2020
Share
ஓசூர்: ஓசூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 698 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பல்வேறு தேவைகளுக்கு வரும் மக்களிடம், புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் சென்றன.

ஓசூர்: ஓசூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 698 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பல்வேறு தேவைகளுக்கு வரும் மக்களிடம், புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் சென்றன. இதன்படி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட, 10 பேர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இரவு, 8:15 மணி வரை, நான்கு மணி நேரம் நடந்த சோதனையில், ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 698 ரூபாய் சிக்கியது. இது தொடர்பாக, ஆர்.டி.ஓ., ஈஸ்வரமூர்த்தி மற்றும் அலுவலக ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ., ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம், துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X