பொது செய்தி

தமிழ்நாடு

கவுண்டன்ய மகாநதியில் வெள்ளம்: 1,000 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

Added : நவ 28, 2020
Share
Advertisement
குடியாத்தம்: கவுண்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், குடியாத்தம் அருகே நள்ளிரவில், 1,000 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததது.'நிவர்' புயலால், ஆந்திரா மாநிலம், பலமனேர், புங்கனூர், மதனப்பள்ளி, பங்காருபாளையம் ஆகிய பகுதிகளில், பெய்து வரும் கன மழையால், அருகிலுள்ள, வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, கவுண்டன்ய மகாநதியில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு,

குடியாத்தம்: கவுண்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், குடியாத்தம் அருகே நள்ளிரவில், 1,000 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததது.


'நிவர்' புயலால், ஆந்திரா மாநிலம், பலமனேர், புங்கனூர், மதனப்பள்ளி, பங்காருபாளையம் ஆகிய பகுதிகளில், பெய்து வரும் கன மழையால், அருகிலுள்ள, வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, கவுண்டன்ய மகாநதியில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவுண்டன்ய மகாநதி ஆற்றோரமுள்ள குடியாத்தம் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவில், பாவோடும்தோப்பு, கோபாலபுரம், சுண்ணாம்புபேட்டை, ஜோகிமடம், இந்திரா நகர், கொண்ட சமுத்திரம், அக்ராவரம் பகுதிகளில், 1,000 வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மீட்பு குழுவினர், 100 பேர் விரைந்து சென்று, அங்கு வசித்த, 4,000 பேரை மீட்டு, குடியாத்தத்திலுள்ள முகாம்களில் தங்க வைத்தனர். வெள்ளநீர் அளவு அதிகரித்து வருவதால், கவுண்டன்ய மகா நதியையொட்டியுள்ள, 25 கிராம மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் எச்சரித்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு, ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X