பொது செய்தி

தமிழ்நாடு

'நிவர்' புயல் மழையால் பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்,'நிவர்' புயல் மழையால், ஜவ்வாதுமலையிலுள்ள, பீமன் நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில், 'நிவர்' புயலால், கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், ஜவ்வாதுமலையில் அதிகபட்சமாக, 134.5 மி.மீ., மழை பதிவானது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஜவ்வாதுமலையிலுள்ள பீமன் நீர்வீழ்ச்சியில், வெள்ளம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்,'நிவர்' புயல் மழையால், ஜவ்வாதுமலையிலுள்ள, பீமன் நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில், 'நிவர்' புயலால், கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், ஜவ்வாதுமலையில் அதிகபட்சமாக, 134.5 மி.மீ., மழை பதிவானது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஜவ்வாதுமலையிலுள்ள பீமன் நீர்வீழ்ச்சியில், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோன்று, ஆரணி நகரில் செல்லும், கமண்டல நாகநதி ஆற்றில், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சேவூர் - முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை அருகே உள்ள தடுப்பணை நிரம்பி, தண்ணீர் வழிந்தோடியது. இதை, பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். மேம்பாலத்திலிருந்து, பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டனர். இதேபோன்று, செய்யாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X