பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. நாளை, 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. நாளை, 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, 28ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நேற்று மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயாரித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்க்க, கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கொரோனா ஊரடங்கால், இன்று முதல், 30 வரை மூன்று நாட்களுக்கு, வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வரவும், 29, 30 ஆகிய இரண்டு நாட்கள், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X