பொது செய்தி

தமிழ்நாடு

75 சதவீத தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தயாரிப்பாளர் கோரிக்கை

Added : நவ 28, 2020
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன் மகன் பிரவீன்குமார் - மோனிகா திருமண விழா, ஆத்தூர், அம்மம்பாளையத்தில், நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: புயலால் கடும் பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு திறமையாக கையாண்டதால், எந்த பாதிப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு,

ஆத்தூர்: சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன் மகன் பிரவீன்குமார் - மோனிகா திருமண விழா, ஆத்தூர், அம்மம்பாளையத்தில், நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: புயலால் கடும் பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு திறமையாக கையாண்டதால், எந்த பாதிப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததே காரணம். தற்போது, 50 சதவீத சினிமா தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. 75 சதவீத தியேட்டர்களை திறக்க வழிவகை செய்ய, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அப்படி திறக்கும்போது, பெரிய திரைப்படங்கள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்த்திய நடிகர்: திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய்சேதுபதி, மணமக்கள் பிரவீன்குமார் - மோனிகாவை வாழ்த்தினார். அதேபோல், நடிகை விந்தியா, நடிகர் சரவணன், திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகர்கள் வாழ்த்தினர்.

வரவேற்ற சிறுமி: 'ஏழைகளின் தலைவரே, தமிழ்நாட்டின் முதல்வரே வருக, வருக' எனும் பதாகையுடன், முதல்வரை வரவேற்க, திருமண விழா நுழைவாயில் பகுதியில் ஒரு சிறுமி காத்திருந்தார். அவரை, முதல்வர், அமைச்சர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X