பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: மும்பை, ஐதராபாத், மற்றும் புனேயில் உள்ள ஆய்வகங்களில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.பிரதமர் மோடி இன்று (28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி முதலாவதாக,

புதுடில்லி: மும்பை, ஐதராபாத், மற்றும் புனேயில் உள்ள ஆய்வகங்களில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி இன்று (28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி முதலாவதாக, ஆமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் - டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்த மருந்து, தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.latest tamil news


இதன் பிறகு மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ஜைடஸ் கடிலா நிறுவனம் உள்நாட்டில் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தை, ஆமதாபாத்தில், பயோடெக் பூங்காவில் உள்ள ஆய்வகத்தை ஆய்வு செய்தேன். இந்த மருந்தை தயாரிக்கும் பணியில் உள்ள குழுவினரை பாராட்டினேன். இந்த பயணத்தில் உள்ளவர்களுடன் அரசு இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை மோடி ஆய்வு செய்தார். இந்த மருந்து தற்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.


latest tamil news


பின்னர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் ஆய்வகத்தில், கொரோனா தடுப்பு மருந்து குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சோதனையில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பணிகளை துரிதபடுத்துவது குறித்து, விஞ்ஞானிகள் குழுவினர், ஐசிஎம்ஆர் அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
latest tamil newsபின்னர், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை பிரதமர் ஆய்வு செய்தார். இந்த நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
28-நவ-202018:34:38 IST Report Abuse
Thirumal Kumaresan நல்ல செயல் பாராட்டுக்கள், நமது நாட்டு தயாரிப்புக்கே முன்னுரிமை கொடுக்க பட வேண்டும்.என்பது எங்கள் உரிமையான வேண்டுகோள்.
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
28-நவ-202017:11:03 IST Report Abuse
vinu எதற்கு இந்த விளம்பரம். அடுத்தவன் கண்டு பிடித்த மருந்திற்கு நமக்கு எதற்கு விளம்பரம்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
28-நவ-202013:46:25 IST Report Abuse
Murthy விளம்பரமே மூலதனம்........ டிரம்ப் இதைத்தான் செய்தார். பொருளாதாரத்தை பற்றி எப்போது பேசுவீர்கள்?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
28-நவ-202018:45:17 IST Report Abuse
 Muruga Velபொருளாதாரம் வீட்டிலிருந்து ஆரம்பமாகிறது ..அளவுடன் குழந்தைகள் பெற்று தரமான கல்வி அளித்தால் பொருளாதாரம் தானாக முன்னேறும் .. பங்கு சந்தைகள் கோரோனோ தாக்கத்திலிருந்து மீண்டு புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது ..இந்தியா வாக்சின் உற்பத்தியில் முன்னணி நாடு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X