பொது செய்தி

தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வு: டிச.,1ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தென் மாவட்டங்களை நோக்கி வரக்கூடும்.28.11.2020 மற்றும் 29.11.2020 : தென்
வங்கக்கடல், காற்றழுத்ததாழ்வு, சென்னைவானிலைமையம்,  வானிலைமையம்

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தென் மாவட்டங்களை நோக்கி வரக்கூடும்.


28.11.2020 மற்றும் 29.11.2020 :
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,

30.11.2020: தென் மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,


01.12.2020:
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை விவரம் (சென்டிமீட்டரில்) மேட்டுப்பட்டி (மதுரை) 9, அவிநாசி (திருப்பூர்) 8, வாடிப்பட்டி (மதுரை), சோழவந்தான் (Madurai) தலா 7, ஆண்டிபட்டி (தேனி), வத்ராயிருப்பு (விருதுநகர்), திருப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 6 .


latest tamil news

மீனவர்களுக்கான எச்சரிக்கைநவம்பர் 28: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்

நவம்பர் 29: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் , தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ,ல வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ, வேகத்திலும் வீசக்கூடும்

நவம்பர் 30: தெற்கு வாங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வாங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்


டிசம்பர் 01:
தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்

டிசம்பர் 02: தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள். மாலத்தீவு மற்றும் லத்தச்சத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்

இதனால், மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ் கடல் பகுதிக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறினால், ‛புரெவி' என பெயர் சூட்டப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202017:25:48 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நீர் மேலாண்மையை அதிகம் அரசு கவனிக்கவேண்டும் குஜராத் நீர் மேலாண்மையில் சிறப்பாக உள்ளது அதனால் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி செய்கிறது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-202017:19:36 IST Report Abuse
Lion Drsekar நல்லவேளை அங்கெல்லாம் அடுக்கு மாடி இல்லை ஆகவே குட்டைகள், குளங்கள் , நதிகள் பிழைத்தது, மழை நீர் பூமிக்குள் இறங்கியிருக்கும், நமக்கு கவலை இல்லை,பாவம் மழை நீர் தங்குவதற்கு தெருத்தெருவாக அலைந்து தேடி வழி தெரியாமல் செய்வது அறியாமல் வேறு வழியே இல்லாமல் பிறந்த வீட்டுக்கே சென்றுவிட்டது, ஒரே நாளில் திக்கு முக்காடி அதுவும் எல்லா இடங்களிலும் தான் வாழ்ந்த வீடுகளை தேடி பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இராட்சச மோட்டார் வைத்து சீக்கிரமாக பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைத்ததால் எல்லோரும் நாளை என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் நிம்மதியாக பெருமூச்சு விடுவது என்றாகிவிட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
28-நவ-202013:44:04 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மழை நீர் சேமிப்பு பற்றி நான் ஏற்கனேவே எனது கருத்தை பதிவு செய்துள்ளேன். அரசிடம் உள்ள தரிசு நிலங்களில் செயற்கை ஏரிகளை உருவாக்கி அதில் உபரி நீரை சேமிக்கலாம். ராட்சச குழாய்களின் மூலமாக அருகருகே உள்ள நீர் நிலைகளை இணைக்கலாம். நீர் ஆதாரங்களை மறைத்து கட்டிடம் எழுப்பியவர்கள் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கலாம். பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்கலாம். மீறுவோருக்கு அபராதமோ தண்டனையோ தரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X