ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் அமல்படுத்தட்டும்: பிரியங்கா

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி, ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் அமல்படுத்தட்டும் என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.சட்டசபை சபாநாயகர்களின், 80ம் ஆண்டு மாநாட்டில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, ‛ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல; இது, நம் நாட்டுக்கான தேவையும் கூட,' என பேசியிருந்தார். இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்த
Priyanka, OneNationOneElection, Congress, Modi, பிரதமர், மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அணுகுமுறை, பிரியங்கா, காங்கிரஸ்

புதுடில்லி: பிரதமர் மோடி, ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் அமல்படுத்தட்டும் என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
சட்டசபை சபாநாயகர்களின், 80ம் ஆண்டு மாநாட்டில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, ‛ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல; இது, நம் நாட்டுக்கான தேவையும் கூட,' என பேசியிருந்தார். இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி நோக்கி பேரணி சென்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீ்சினர், தண்ணீர் பீய்ச்சியடித்து கலைத்தனர்.


latest tamil news


இதனை சுட்டிக்காட்டி காங்., பொதுச்செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: விவசாயிகளின் குரலை ஒடுக்குவதற்கு அவர்கள் மீது தண்ணீா் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தடுப்பதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வ உரிமை என்பதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தோ்தல்' முறையை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமா் மோடி உறுதி கொண்டுள்ளார். அதேபோல், 'ஒரே நாடு, ஒரே அணுகுமுறை' என்பதையும் அமல்படுத்தத முயற்சி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரிய மரியாதையை அவா் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
29-நவ-202003:52:47 IST Report Abuse
anbu எல்லா மதத்தினரையும் சமமாக மதிக்க நீங்களும் உங்கள் கூட்டணியின் கட்சிகளும் கற்றுக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202003:50:55 IST Report Abuse
J.V. Iyer ஒரே நாடு, ஒரே சட்டம் கொண்டுவந்தால் பிரியங்கா, வாத்ரா எல்லோரும் சிறையில். இவருக்கு சும்மா இருப்பதே சொர்கம். வாயால் மாட்டிக்கொள்கிறார். ராகுல்ஜி சகோதரி அல்லாவா? தவளையும் தன்வாயால் கெடும். வேறு என்ன
Rate this:
Cancel
shivan22 - uuthns,அங்கோலா
28-நவ-202023:42:20 IST Report Abuse
shivan22 The points made by Mrs. Priyanka Gandhi are quite correct. BJP government does not care about non-BJP states. BJP ஆட்கள் முதலில் எல்லா மாநிலங்களையும் சமமாக அணுக வேண்டும். BJP ஆட்சி அல்லாத மாநிலங்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள் CM ஆக இருந்த பொது கூட தமிழ்நாட்டுக்கு குடபடவேண்டிய நிதிகளை சரியாக கொடுக்கவில்லை. பிஜேபி டில்லி ஆட்களுக்கு தமிழை சுத்தமாக பிடிக்காது. அனால் திருவள்ளுவரை பற்றி மேடையில்இரண்டு வார்த்தைகள் பேசுவார்கள் . சார்.. நடத்தும் தேர்தல்களை சுதந்திரமாக , நேர்மையாக , நாணயமாக நடத்தவும் .. அதை உண்மையாக நீங்கள் செய்தீர்கள் என்றாலே இந்தியாவிற்கு நீங்கள் செய்யும் மிக நல்ல காரியம் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X