பொது செய்தி

இந்தியா

‛லவ் ஜிகாத்': 10 ஆண்டு சிறை விதிக்கும் அவசர சட்டத்திற்கு உ.பி., கவர்னர் ஒப்புதல்

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
லக்னோ: நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், ‛லவ் ஜிகாத்' ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.உ.பி.,யில் திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், ஹிந்துப் பெண்களைக் காக்கவும், ‛லவ் ஜிகாத்'துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி
LoveJihad, Ordinance, UP_Governor, Approval, Promulgates, Unlawful,Religious, Conversion

லக்னோ: நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், ‛லவ் ஜிகாத்' ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

உ.பி.,யில் திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், ஹிந்துப் பெண்களைக் காக்கவும், ‛லவ் ஜிகாத்'துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இதையடுத்து, லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இதற்கு உ.பி., அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சட்டம் குறித்து மாநில கேபினெட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் முன்பு கூறுகையில், ‛திருமணத்தை அடிப்படையாக வைத்து 100க்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நேர்மையற்ற மதமாற்றத்தைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


latest tamil news


கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மைனர் சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இது ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்,' எனக் கூறினார்.

இந்த அவசர சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக உ.பி., அரசு அனுப்பி இருந்த நிலையில், இதற்கு கவர்னர் ஆனந்தி பென்படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Mumbai,இந்தியா
28-நவ-202023:09:49 IST Report Abuse
Balasubramanian இஸ்லாமியரை திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஹிந்து பெண் தெரிந்துக் கொள்ளவேண்டிய இந்திய திருமண சட்டங்கள். ராஜேஷ் கேஹானி இஸ்லாமியரை திருமணம் செய்யும் ஹிந்து பெண்ணுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பதை கேள்வி பதில் வடிவில் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. கலப்புத் திருமணம், வெவ்வேறு மதத்தினரிடையே திருமணம் இன்று பரவலாகி விட்டது. திருமணத்திற்கு பின் தனக்கு என்னென்ன உரிமைகள் கிடைக்கும் என்பதை ஒரு பெண் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை இந்தத் திருமணம் முறிவடைந்தால் சட்டரீதியாக என்னென்ன சொத்துக்களுக்கு உரிமை உண்டு/உரிமை பெறமுடியும். சமீபத்தில், குஜராத்தி ஜைன சமூகத்தை சேர்ந்த 30 வயது நிறம்பிய பெண்(நியா MBA in Finance), தன்னுடைய சொந்த விஷயம் பற்றி விவாதிக்க வேண்டும் என்றார். அவர் தன்னுடன் பணிபுரியும், சன்னி பிரிவு இஸ்லாமியரை விரும்புவதாகவும், ஒருவரை ஒருவருக்கு பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நியா பாரம்பரியம் மிக்க குஜராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அவருடைய பெற்றோர் இதை ஏற்க மறுப்பதாகவும், திருமணத்திற்கு பின் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்தார். பையினின் பெற்றோருக்கு முழு சம்மதம் என்றும் ஆனால் நியா இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், திருமணம் நிகாஹ் முறைப்படி நடக்க வேண்டும் என்றும், இது உறவினர்களை திருப்தி செய்ய என்றும் கூறினார். நியா, நல்லது கெட்டது தெரிந்து கொண்டு, சட்ட பூர்வமாக தனக்கு பாதுக்காப்பு தரக்கூடியது எது என்று தெரிந்து, அதன் பின்னர் முடிவெடுக்க தீர்மானித்தார். ஒரு சட்ட ஆலோசகராக, சட்ட ரீதியாக, நன்மை தீமைகளை எடுத்துக் கூறினேன். எங்கள் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது. ஆகையால் அதை கேள்வி பதிலாக தொகுத்து எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது சிலர் பலி ஆடாக மாறுவதை தடுக்க உதவும். சட்டபூர்வமான தகவல்களை வழங்குவதே என் நோக்கம். இந்த கேள்வி பதில் உங்களுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்வதற்கு மட்டுமே தவிர... யாரையும் தூண்டிவிடும் நோக்கம் இல்லை. தகவல்கள் கை வசம் இருந்தால் முடிவு எடுப்பதற்கு வசதியாக இருக்கும், மேலும் பின்னர் வருந்த வேண்டியதில்லை. உரையாடல் பின் வருமாறு: 🔥நியா: என்னுடைய சூழ்நிலையில், திருமணம் செய்வதற்கான வழிகள் என்னென்ன? பதில் 1: 3 வழிகளில் திருமணம் செய்து கொள்ளலாம் நியா. 🚩ஒன்று, Special Marriages Act, என்ற சட்டப்படி, நீயோ உன் கணவரோ மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் இருவருக்கும் திருமண பந்தத்தில் சம உரிமை உண்டு. 🚩இரண்டு, இஸ்லாமிய சட்டப்படி நிகாஹ் செய்து கொள்ளலாம். அதற்கு நீ மதம் மாற வேண்டும், ஏனென்றால் இஸ்லாமியர் இடையே தான் நிகாஹ் செய்ய முடியும். நீ மதம் மாறும் பொது உன் பெயரும் மாறிவிடும். ஆனால் பொதுவாக (சட்ட ரீதியான ஆவணங்கள் நீங்கலாக) உன் பழைய பெயருடன் வலம் வரலாம். பல நடிகைகள் வெளி உலகில் தங்கள், பழைய பெயரிலேயே, திருமணத்துக்கு முந்தைய பெயரிலேயே அழைக்கப் படுகிறார்கள். ஷர்மிளா தாகூரை யாரும் ஆயீஷா பேகம் என்று அழைப்பதில்லை. 🚩மூன்று, சலீம் ஹிந்துவாக மதம் மாறி Hindu Marriage Act, படி செய்து கொள்ளலாம். 🔥நியா: நான் இஸ்லாமியராக மதம் மாறினால் என்னுடைய உரிமை எந்த சட்டத்தின் கீழ் வரும்? பதில் 2: உன்னுடைய உரிமைகள், Muslim Personal Law அதாவது Muslim Personal Law (Shariat) Application Act, 1937 கீழ் வரும். 🔥நியா: Muslim Personal Law வின் படி எனக்கும் என் கணவருக்கும் என்னென்ன உரிமைகள் கிடைக்கும்? பதில் 3: Muslim Personal Law (Shariat) Application Act, 1937, பலதார மணத்தை சம்மதிக்கிறது. அதாவது சலீம் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்து, நான்கு மனைவியுடன் வாழமுடியும். ஒரு மனைவியாக, கணவனை வேறு 3 பெண்களுடன் இருப்பதை தடுக்கவோ எதிர்க்கவோ முடியாது. நான் உன் மனதை கலவரப்படுத்த இதை சொல்லவில்லை. ஆனால் இந்த சட்டம் ஒரே நேரத்தில் 4 மனைவியை திருமணம் செய்யவும் வாழவும் அனுமதிக்கிறது. சலீம் உன்னை விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்யமாட்டான்.ஆனால் இது போன்ற அசாதாரண சூழ்நிலையை கையாள்வது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். மேலும், Muslim Personal Law வின் கீழ் செய்யப்பட்ட திருமணம் ஒரு ஒப்பந்தம் போன்றது. அதன் விதிகள் வரைமுறை ஷரியத் கீழ்வரும் நிக்காநாமாவால் நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் இன்று வரை முறைப்படுத்தவில்லை. 🔥நியா: ஷரியத்னா என்ன? பதில் 4: ஷரியத் அல்லது ஷரியா என்பது இஸ்லாமியர்களுக்கான சட்டம். இன்று வரை இதற்கான வழி முறைகள் நிர்ணயிக்கப் படவில்லை. இதன் சட்ட வடிவம் இன்று வரை தெளிவற்ற நிலையிலும் வரையறுக்கப்படாமலும் உள்ளது. இது பல இஸ்லாமிய உட்பிரிவுகளுக்கு பொருந்தாது. இதனுடைய விளக்கம் பெரும்பாலும் மௌல்விகளின் ஆணைகளுக்கு 'பாத்வா' க்கும் ஏற்ப ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டு இருக்கும். 🔥நியா: நிக்காநாமா என்றால் என்ன? அதில் என்னென்ன விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன? பதில் 5: இதற்கு என்று ஒரு நிரந்தர வடிவம் கிடையாது. இவை பெரும்பாலும் ஒரு பக்கம் சார்ந்ததாக, மௌலவிக்களாலும் முல்லாக்களாலும், ஆணுக்கு சாதகமாக வழங்கப்படுகிறது. Dower, Mehr, Alimony - ஜீவனாம்சம் போன்றவற்றை இவர்கள் தான் தீர்மானிப்பார்கள். 🔥நியா: நாங்கள் Special Marriage Act படி திருமணம் செய்து கொண்டால், அந்த சட்டம் சலீமை ஒரு தார மணத்துக்கு மேல், அதாவது மனைவி இருக்கும் பொது வேறு ஒருவரை மணம் செய்ய அனுமதிக்குமா? பதில் 6: ஒரு வேளை சலீம் ஹிந்துவாக மாறி Hindu Marriage Act யின் கீழ் திருமணம் செய்தாலோ அல்லது Special Marriage Act இன் கீழ் திருமணம் செய்தாலோ, சலீமால் ஓன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய முடியாது. சட்டப்படி ஒரு மனைவி மட்டுமே செல்லுபடியாகும். முதல் மனைவி, நியா இருக்கும் வரை சட்டப்படி இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது. நீங்கள் இருவரும் சட்டத்தின் முன் சம உரிமைகளை பெறுவீர்கள். ஹிந்து சட்டப்படி திருமணம் புனித பாந்தமாக கருதப்படுகிறது. Special Marriage Actஇன் கீழ் திருமணம் செய்தலும் பல தார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. உன்னுடைய வாழ்நாளில், உன்னை விவாகரத்து செய்யாமல் சலீம் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. அந்த இரண்டாவது மனைவிக்கு சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. உன்னுடைய உரிமையில் இந்தப் பிரச்சினையும் வராது. 🔥நியா: Special Marriage Act மற்றும் Hindu Law வின் படி விவாகரத்து கோரும் சட்டங்கள் என்னென்ன? பதில் 7: Special Marriage Act, 1954 அல்லது Hindu Marriage Act, 1955 இன் கீழ் திருமணம் செய்தால் Family Courts Act, 1984, படி தான் விவாகரத்து பெற முடியும். இதற்கு Family Courtஇல் வழக்கு பதிவு செய்து, நல்ல படியாக நடத்தினால், அதாவது விவகாரத்துக்கான முகாந்திரங்களை சட்டப்படி நிரூபித்தால் விவகாரத்துப் பெறலாம். மேலும் எந்த நீதிமன்றம் குழந்தைகள் மீது யாருக்கு உரிமை உள்ளது மற்றும் ஜீவனாம்சம் பற்றி தீர்மானிக்கும். வழக்கும் நடக்கும் காலத்திலும், பின்னரும் வழங்கப்படும் தொகையை நீதிமன்றம் தீர்மானிக்கும். மேலும் இது கணவனின் வருமானம் மற்றும் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்படும். 🔥நியா: Muslim Law வின் கீழ் விவகாரத்துக்கு என்ன சட்டம் உள்ளது? நான் எப்படி கணவனை விவாகரத்து செய்ய முடியும்? பதில் 8: இஸ்லாமிய திருமண கலைப்பு சட்டம், Dissolution of Muslim Marriages Act, 1939, இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெரும் உரிமையையும், கணவனால் விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்ணின் உரிமைகள் பற்றியும் சொல்கிறது. இந்த சட்டத்திற்கு உட்பட்டு பெண்கள் விவாகரத்துக் கோர முடியும். எனினும் கணவன் தலாக் (Talaq) சொல்லி மனைவியை விவாகரத்து செய்ய முடியும். இது சட்டப்படி செல்லும். அவர் எந்த நீதிமன்றத்தையும் அணுக வேண்டியதில்லை. 🔥நியா: Muslim Law வின் படி எப்படி கணவனால் விவகாரத்துப் பெற முடியும்? பதில் 9: உடனடி விவாகரத்து, triple Talaq தடை செய்யப்பட்டாலும், அது சட்டப்படி குற்றம் என்றாலும், இஸ்லாமிய ஆண் விவாகரத்து செய்வது மிகவும் எளிது. கணவனால் தலாக் சொல்லி மூன்று மாதவிடாய் காலத்தில் விவகாரத்துப் பெற முடியும். இதற்கு மூன்று இட்டட் (Iddat - 3 menstrual cycles) என்று பெயர். கருவுற்றிருந்தால் மகப்பேறு காலம் வரை இட்டட் காலம் தொடரும். மற்றப்படி ஜீவனாம்சம் இன்ன பிற உரிமைகளும் நிக்காநாமா ஒப்பந்தத்தின் கீழ் வரும். 'மெஹர்' நிகாஹ் முன்னரே தீர்மானிக்கப் படும். 🔥நியா: Muslim Lawவின் கீழ் விவாகரத்து பெற்றால், எனக்கும் என் குழந்தைக்கும் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்? பதில் 10: இஸ்லாமிய பெண்கள் உரிமை பாதுகாப்பு (Protection of Rights on Divorce Act), 1986, என்ற சட்டம் பெண்களின் உரிமை மற்றும் ஜீவனாம்சம் உள்ளடக்கியது. இந்த சட்டப்படி கணவன் மனைவிக்கு கண்டிப்பாக ஜீவனாம்சம் வழங்க வேண்டும், ஆனால், அது இட்டட் காலம், 90 நாட்கள் வரை மட்டுமே. அதன் பின் பெண்ணை காப்பாற்ற வேண்டியது அவள் பெற்றோரின் கடமை. ஒரு வேளை வளர்ந்த பிள்ளைகள் இருந்தால், இந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டியது அவர்கள் பொறுப்பு அந்தப் பெண்ணுக்கு தாய் வழி உறவு யாரும் இல்லை என்றால், மாஜிஸ்திரேட், எங்கு அவள் பெட்டிஷன் நிலுவையில் உள்ளது, அங்குள்ள வக்ப்(wakf ) போர்டுக்கு பிராமரிப்புத் தொகை வழங்கும்படி உத்தரவிடுவார். 🔥நியா: Hindu Law மற்றும் the Special Marriage Act யின் கீழ் எனக்கும் என் குழந்தைக்கும் கிடைக்கும் உரிமைகள் என்ன? பதில் 11: Special Marriage Act, 1954 அல்லது Hindu Marriage Act, 1955 இன் கீழ் திருமணம் செய்தால், Hindu Marriage Act, 1955 இன் Section 13ல் விவாகரத்து பெற முடியும். இதன் படி கணவனும் மனைவியும் சமம். விவகாரத்துக்கான காரணம் சொல்லி கணவனோ மனைவியோ யார் வேண்டுமானாலும் விவாகரத்துக் கோரலாம். Special Marriage Act, 1954 இன் section 27இன் கீழ் யாரேனும் ஒருவர் மனு தாக்கல் செய்யலாம் அல்லது Section 28இன் கீழ் பரஸ்பர உடன்படிக்கையினால் விவாகரத்து கேட்கலாம். 🔥நியா: நான் முஸ்லிமாக மதம் மாறி ஷரியத் சட்டப்படி திருமணம் செய்ததால் என்ன சொத்துக்களுக்கு உரிமை உண்டு? பதில் 12: கணவன் இறந்தபின், இந்த திருமணம் வழியாக குழந்தை இருந்தால் அவனது சொத்தில் எட்டில் ஒரு பங்கு(1/8) அவன் மனைவிக்கு கிடைக்கும். குழந்தை இல்லை என்றால் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு(1/4) கிடைக்கும். மகனுக்கு கிடைக்கும் சொத்தில் பாதி பங்கு மகளுக்கு கிடைக்கும். மனைவி இறந்தால், குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், கணவனுக்கு அவள் சொத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) கிடைக்கும். ஒரு வேளை குழந்தை இல்லை என்றால் மனைவியின் சொத்தில் பாதி கணவனுக்கும் கிடைக்கும். மகளுக்கு கிடைக்கும் சொத்தில் இரு மடங்கு சொத்து மகனுக்கு கிடைக்கும். ஒரு இஸ்லாமிய தாயார் தன்னுடைய குழந்தைகளின் சொத்துகளுக்கு வாரிசுதாரர் ஆகமுடியும். தன்னுடைய மகன் இறக்கும் பட்சத்தில், தன் மகன் தந்தையாகவும் இருக்கும் பட்சத்தில், அவருடைய சொத்தில் ஆறில் ஒரு பங்கு இஸ்லாமிய தாயாருக்கு கிடைக்கும். பேரக் குழந்தைகள் இல்லாத பட்சத்தில், மகனுடைய சொத்தில் மூன்றில் ஒரு பங்கு (1/3) தாயுக்கு கிடைக்கும். என்ன இருந்தாலும் அவரால் மூன்றில் ஓர் பங்குக்கு மேல் சொத்தை யாருக்கும் கொடுக்க முடியாது. ஒரு வேளை அவருடைய கணவர் ஒரே வாரிசாக இருந்தால், அப்போது மூன்றில் இரெண்டு பங்கை அவர் உயில் எழுதி கொடுக்க முடியும். ஒரு ஹிந்து பெண், இஸ்லாமியராக மாறாமல், இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், ஹிந்து பெண்ணால் எந்த சொத்துக்கும் உரிமை கோர முடியாது. மேலும் அந்த விவாஹம் தற்போதய சட்டப்படி முறையானதாகவோ தகுதி உள்ளதாகவோ கருதப்பட மாட்டாது. ஹிந்துப் பெண் மெஹர் (Mehr) மட்டும் பெற முடியும். அவருக்கு சொத்தில் உரிமை கிடையாது. உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், இஸ்லாமியரை சிலை வழிபாடு செய்பவரோ அல்லது நெருப்பை வழிபாடுபவரோ மணந்தால் அந்தத் திருமணம் அது செல்லுபடியாகாதென்றும் (Sahih), வெறுமையானது என்றும் (batil), முறையற்றதாகவும் (fasid) கருதப்படும் என்கிறது. மேலும் இத்தகைய திருமணத்தில் பிறந்த குழந்தை தகப்பனின் சொத்தில் உரிமை கோரலாம் ஆனால் மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. 🔥நியா: இப்போது சலீம் ஹிந்துவாக மாறி நாங்கள் Hindu Marriage Act படி திருமணம் செய்தால் எனக்கு என்னென்ன வாரிசு உரிமைகள் கிடைக்கும்? பதில் 13: மனைவி, நியா, உனக்கு உன் கணவனின் சொத்துக்கள் மீது மற்ற வாரிசுதாரர்களுக்கு உள்ள உரிமை உண்டு. வேறு வாரிசுகளே இல்லை என்றால் கணவனின் முழு சொத்தும் மனைவிக்கே. Hindu Marriage Act என்பது புத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்களுக்கும் பொருந்தும். அது போல திருமணம் ஆன ஹிந்து பெண்ணுக்கு அவருடைய சொத்தின் மீது முழு உரிமை உண்டு. மேலும் அவளுடைய கணவனுக்கு பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் உறைவிடம் வழங்க வேண்டிய கடமை / பொறுப்பு உள்ளது. கூட்டு குடும்பத்தில் வாசித்தால் இது குடும்பத்த்தின் பொறுப்பு. இந்த ஜோடி விவாகரத்து செய்தால், மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சத்தை நீதிமன்றம் தீர்மானிக்கும். விவாகரத்து செய்வதன் மூலம் கணவனிடமிருந்து முழுவதுமாக பிரிக்கப்படுவார். இதன் பின் கணவன் உயில் இன்றி இறந்தால் மனைவிக்கு அவர் சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொது கணவன் இரண்டாவது திருமணம் செயது கொண்டால், இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது. மேலும் இரண்டாவது மனைவி சொத்துக்களுக்கு வாரிசு ஆக மாட்டார். முதல் மனைவியின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு வேளை இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் வாரிசுதாரர்கள் உரிமை பெறுவார்கள். இரு வேறு மதத்தினரிடையே திருமணம் (inter-faith marriage) என்றால் கணவனின் மதப்படி உரிமைகள் வழங்கப்படும். 🔥நியா: Special Marriage Actஇன் கீழ் திருமணம் செய்தால் என்ன உரிமைக் கிடைக்கும்? பதில் 14: ஒரு இஸ்லாமியர் Special Marriage Act இன் கீழ் திருமணம் செய்தால், அவர் அதன் பிறகு சொத்து விவகாரத்தில் முஸ்லிமாக கருதப்படமாட்டார். இதன் படி, இந்த இஸ்லாமியரின் இறப்புக்குப் பின் அவருடைய சொத்துக்கள் இஸ்லாமிய வாரிசு சட்டத்தின் கீழ் வராது. இது போன்ற இஸ்லாமியரின் சொத்து உரிமை Succession Act, 1925, கீழ் வரும். இவருடைய வாரிசுகளுக்கு சொத்துக்களில் சம உரிமை, ஆண் பெண் இருபாலருக்கும், வழங்கப்படும். இதுவே வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் (inter-faith marriage) செய்திருந்தால், மனைவிக்கு எல்லா வாரிசுதாரர் போல் (Class I) சம உரிமை கிடைக்கும். 🔥நியா: ஹலாலா என்று ஏதோ கேள்விப்பட்டேன். அப்படி என்றால் என்ன? பதில் 15: இஸ்லாமிய சட்டப்படி, கணவன் ஒரே நேரத்தில், மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியும். தற்சமயம் இது சட்டப்படி செல்லாது. இப்போதுள்ள நடைமுறையில், மூன்று மாதவிடாய் காலத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு தலாக் சொல்லி விவாகரத்து பெற முடியும். மூன்றாவது மாதம் முடியும் போது விவாகரத்து ஆகிவிடும். ஒரு வேளை இந்த ஜோடி மீண்டும் இணைந்து மணம்புரிந்து வாழ நினைத்தால், அதாவது தலாக் சொல்லி பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ, அந்தப் பெண் வேறு ஒருவரை மணந்து, அவருடன் வாழ்க்கை நடத்தி, அவரிடம் இருந்து விவகாரத்துப் பெற்று பின்னர் முதல் கணவருடன் இணைய வேண்டும். இதற்கு பெயர் தஹலில் அல்லது நிகாஹ்ஹலாலா. 🔥நியா: நான் சலீமை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். எனக்கு சிறந்தது எது என்று நினைக்கிறீர்கள்? பதில் 16: நியா, நீ சலீமை திருமணம் செய்வதானால், அவனிடம் Special Marriage Act பற்றி சொல்லி சம்மதிக்க சொல்லு. முன்பு கூறியது போல், முஸ்லிமாக மாறாமல் நிகாஹ் செய்தால் அது Muslim Personal Lawஇன் படி செல்லாது(fasid). இந்த முறையற்ற தன்மை நீங்க நீ மதம் மாற வேண்டும். நீ மதம் மாறினால் உனக்கு கிடைக்கும் மற்றும் நிராகரிக்கப்படும் உரிமைகள் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். 🔥நியா: நான் சலீமை, நீங்கள் கூறியபடி Special Marriage Act இன் கீழ் திருமணம் செய்து கொண்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? பதில் 17: நியா நான் உனக்கு சட்டத்துக்கு விதிமுறைக்கு உட்பட்டு அறிவுரை வழங்கியுள்ளேன். கவனமாக முடிவெடுக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ Special Marriage Act படி திருமணம் செய்து கொண்டாலும், உறவினர்களின் அழுத்தத்தால் மதம் மாற வேண்டி வரலாம். நான் சலீமை பார்த்ததில்லை. அவன் நல்ல பையனாக இருக்கக்கூடும். இருந்தாலும், குடும்பத்திலிருந்தும், உறவினர்களிடம் இருந்தும் அழுத்தம் வரும்போது ஒரு சிலரால் மட்டும் அதை தாக்குப் பிடிக்க முடியும். எனக்கு அவர்களுடைய குடும்ப பற்றி எதுவும் தெரியாது, அவர்கள் நல்லவர்களாக இருக்கக்கூடும். இருந்தாலும் அவர்கள் தங்களுடைய மருமகள் வேற்று மதத்தவராக இருப்பதை விரும்ப மாட்டார்கள். நீ சமுதாய அழுத்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நீ தான் முடிவு எடுக்க வேண்டும். நீ 10, 20, 30, 40 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை ஊகித்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு புறம் எல்லாம் நல்லபடியாக போகும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் யதார்த்தமாக, உண்மையில் சரியாக போகவில்லை என்றால் உனக்கும் உன் குழந்தைக்கும் என்னென்ன வழிகள் இருக்கும் என்பதை யோசித்து முடிவு எடு. நாங்கள் பல வெவ்வேறு மதத்தவர் இடையே நடக்கும் திருமணங்களைப் பார்த்திருக்கிறோம். பெண்கள் பெரும்பாலும் இதில் சிக்கி தவிப்பதுற்கு காரணம் அவர்கள் பெற்றோரை எதிர்த்து மனம் புரிவதுதான். ஹிந்து பெற்றோர் பிள்ளைகள் முடிவெடுக்கும் போது கூடவே இருப்பார்கள். அவர்கள் இல்லாத போது இல்லாத நிலையில் எப்படி முடிவு எடுப்பாய் என்பதையும் யோசிக்க வேண்டும். இத்துடன் எங்கள் உரையாடல் நிறைவு பெற்றது. நியா நன்றாக ஆலோசித்துவிட்டு வருவதாக சொன்னார். 🚩சில நாட்களுக்கு பின் நியா அழைத்தார். அவர் Special Marriage Act இன் கீழ் திருமணம் செய்ய தீர்மானித்திருப்பதாக கூறினார். மேலே உள்ள கேள்வி பதிலை பெற்றோரிடம் காட்டி அவர்கள் அனுமதியுடன் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். 🚩கதையில் ஒரு திடீர் திருப்பம். 🚩நியா இந்த கேள்வி பதில் தொகுப்பை தன் Boyfriend க்கும் கொடுத்துள்ளார். அவர் தயக்கம் காட்டியுள்ளார். அவர் தன் குடும்பம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார். சலீம் நியாவிடம் இந்த உறவில் நம்பிக்கை முக்கியம் என்றும், அவன் மீது 100% நம்பிக்கை வேண்டும். அவனுடைய காதலை சந்தேகிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளான். 🚩ஊருக்காக நியா மதம் மாறவேண்டும், ஆனால் அவள் விருப்பப்படி அவள் ஹிந்துவாக இருக்கலாம், இப்போது இருப்பது போலவே இருக்கலாம் என்றும் கூறியுள்ளான். மேலும் நியாவின் விருப்பப்படி நிக்காநாமா ஒப்பந்தத்தை தயார் செய்வதாகவும் ஆனால் திருமணம் நிகாஹ் தான் என்றும் சொன்னான். 🚩நியா திருமணத்தை நிறுத்தி விட்டாள். இவற்றை கண்ணீருடன் கூறினாள். நிகாஹ் நடப்பதற்கு முன்னால் இன்று அழுவது எவ்வளவோ மேல். ஒரு வழக்கறிஞராக, நான் ஒரு ஆலோசகர் மட்டுமே. இறுதி முடிவு அவர்களுடையது. ♥️இதை எழுதியவர் 30 வருட அனுபவம் மிக்க வழக்கறிஞர்.
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
28-நவ-202021:45:27 IST Report Abuse
Rajan தீயமுக அல்லக்கைஸ் பெயர் இல்லாமல் திரிவது ஏன்
Rate this:
Cancel
Sankar - Chennai,இந்தியா
28-நவ-202021:37:18 IST Report Abuse
Sankar I need the next Law to be amended as Child's Religion will be Mother's Religion and not Father's.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X