நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு, போலீசார் கொரோனா விழிப்புணர்வு அறிவுரை வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை முக கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற, 230 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முக கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகளை, வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE