கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பம் வரவேற்பு

Added : நவ 28, 2020
Share
நாமக்கல்: 'கபீர் புரஸ்கார்' விருதிற்கு தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வரும், 'கபீர் புரஸ்கார்' விருதிற்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஆற்றிய விபரங்கள்

நாமக்கல்: 'கபீர் புரஸ்கார்' விருதிற்கு தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வரும், 'கபீர் புரஸ்கார்' விருதிற்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஆற்றிய விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை, கலெக்டரின் பரிந்துரையுடன், நவ., 30க்குள் தலைமை அலுவலகம் அனுப்ப வேண்டியுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், நாளைக்குள் (நவ., 29) சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 74017 03492 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X