ராசிபுரம்: கோவில்களில் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 1,052 கோவில்கள் உள்ளன. இதில், திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறிவதற்கான பணி ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, ஆணையர் பிரபாகரன், ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி செவந்தீஸ்வரர், சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர், அத்தனூர் அம்மன் கோவில்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அர்சகர்கள், பக்தர்களுடன் கலந்துரையாடினார். பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இணை ஆணையர் (சேலம்) நடராஜன், உதவி ஆணையர் தமிழரசு உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE