பள்ளிபாளையம்: ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர் மற்றும் பல மாவட்டங்களில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி உள்ளது. சட்டை, லுங்கி, வேட்டி, சுடிதார், துண்டு மற்றும் பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். ஜவுளி உற்பத்தியை பொறுத்தவரை, நூல் விலையை பொறுத்து தான், துணிகளின் விலை இருக்கும். கடந்த ஒரு மாதமாக நூல் விலை அதிகரித்து கொண்டே வருவதால், ஜவுளி உற்பத்ததி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தென்னிந்திய விசைத்தறி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தின் முன்னாள் துணை தலைவர் கருணாநிதி கூறியதாவது: பஞ்சு விலை உயர்வு காரணமாக, நவம்பர் முதல் வாரத்திலிருந்து நூல் விலை உயர்ந்து வருகிறது. அனைத்து வகை காட்டன் நூலும், கிலோவுக்கு, 25 முதல், 30 ரூபாய்; ரேயான் நூல், 20 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. இதனால் ஜவுளி உற்பத்தி செலவு அதிகரித்து விட்டது. துணிகளின் உற்பத்தி விலையை விட, விற்பனை விலை குறைவாக இருந்தால், உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால், ஜவுளிகள் விற்பனையாகாமல் உள்ளன. ஆர்டர் இருந்தாலும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், விசைத்தறி தொழில் முடங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE