கரூர்: கரூர், விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில், கும்பாபி?ஷக விழா நடந்தது. கரூர், பஞ்சலிங்க ஸ்தலம் என அழைக்கப்படும், வஞ்சுலீஸ்வரர் கோவிலில் அமராவதி ஆற்றின், கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த, ஆன்மிக அன்பர்கள் முடிவு செய்தனர். அதற்கு, இந்து சமய அறநிலையத்துறையும் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, கோவிலை புனரமைக்கும் பணி கடந்தாண்டு, நவம்பர் மாதம் துவங்கி, சமீபத்தில் பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து, கும்பாபி?ஷகம் விழா கடந்த, 20ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 6:15 மணிக்கு கும்பாபி ?ஷகம் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE