அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது. 2.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,
US, CoronaVirus, Deaths, EveryHour, அமெரிக்கா, கொரோனா, உயிரிழப்பு,

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது. 2.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் அமெரிக்காவில் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்புகளால் 5 லட்சத்து 11 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஒன்று கூடுவோரால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202003:46:54 IST Report Abuse
J.V. Iyer இப்படியே போடுங்கள். எண்ணிக்கை குறைவாக தெரிகிறது டெல்லியில் தேசவிரோத காங்கிரஸ் பேரணியால், மீண்டும் கலவரம், கொரோனா வெடிக்க இருக்கிறது. இதற்கும் ஒரு முடிவில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-நவ-202020:55:43 IST Report Abuse
Ramesh Sargam மிகவும் வளர்ந்த நாடு என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே நிலைமை இப்படி மோசமாக இருக்குமென்றால், 'வளரும் நாடு' நாம் கருதிக்கொண்டிருக்கும் நம் இந்தியாவில் வைரஸ் இரண்டாவது அலை எப்படி மோசமான விளைவுகளை ஏட்படுத்தும் என்று கருதி மக்களும் அரசாங்கமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். இன்று நமது பிரதமர் தடுப்பு வாக்சின் தயாரிக்கும் மூன்று இடங்களுக்கு நேரடியாக சென்று விவரங்களை கேட்டறிந்திருக்கிறார். நாட்டின் மக்கள் மீது எந்த அளவுக்கு அக்கறை இருந்தால் அவர் அப்படி செய்திருப்பார். வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-202017:29:40 IST Report Abuse
Lion Drsekar அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள் பாராட்டவேண்டும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் கொசுவை விட அதிகமாக எல்லாமே நடந்து கொண்டு இருக்கிறது, எத்தினை கொசுக்கள், என்ன என்ன கொசுக்கள் என்று அந்த அந்த கொசுக்களுக்கே தெரியாது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லாவற்றிக்கும் பொருந்துகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X