பா.ஜ.,வினர் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள்: உத்தவ் தாக்கரே

Updated : நவ 28, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
மும்பை: நான் பா.ஜ.,வினர் மாதிரி தரம் தாழ்ந்து போகமாட்டேன் என மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி தொடர்பாக பா.ஜ.,வுடன் கருத்து வேறுபாடால் கூட்டணியில் இருந்து பிரிந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது.முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு பொறுப்பேற்று ஓராண்டு
ShivSena, UddhavThackeray, BJP, PersonalAttack, சிவசேனா, உத்தவ் தாக்கரே, குடும்பம்

மும்பை: நான் பா.ஜ.,வினர் மாதிரி தரம் தாழ்ந்து போகமாட்டேன் என மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி தொடர்பாக பா.ஜ.,வுடன் கருத்து வேறுபாடால் கூட்டணியில் இருந்து பிரிந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில், செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது: எனது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அவர்கள் (பா.ஜ.,வினர்) ஜோசியம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஓராண்டை கடந்துவிட்டது.


latest tamil news




ஒரு கட்சிக்கு கொள்கை முக்கியம் என்றாலும், அரசு நிர்வாகம் என்பது அதை விட முக்கியமானது. அதனால்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறோம். ஆனால், தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசம் மற்றும் உடல் கவசம் (பிபிஇ) போன்றவை அளிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், மஹாராஷ்டிரா அரசுக்கு சுமார், ரூ.300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

நான் ஒரு போதும் தனிப்பட்ட முறையில் பா.ஜ.,வினரை தாக்கி பேசுவதில்லை. ஆனால், அவர்கள் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்த போது கடுமையாக உழைத்ததால்தான் அவர்களால் வெற்றி பெறமுடிந்தது என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
29-நவ-202011:14:06 IST Report Abuse
ANTONYRAJ எதிரிக்கு எப்போதும் மன்னிப்பு உண்டு.ஆனால் இவர் துரோகி.இவருக்கு இன்னும் காங்கிரஸின் சித்து விளையாட்டுகளைப் பற்றி தெரியவில்லை இவர் காங்ரஸின் கோர முகத்தைக் காணும் நாள் விரைவில் வரும்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
29-நவ-202008:45:41 IST Report Abuse
அறவோன் கொள்ளை அடிக்க முடியவில்லை என்று குடைச்சல் கொடுக்கப்படுகிறது
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
29-நவ-202008:42:55 IST Report Abuse
sankar ஒரு துரோகியை வேறு எப்படி பார்ப்பார்கள் தம்பி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X