புதுடில்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், பாதிப்பு அதிகரிப்பதால், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‛கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கொரோனா மருந்து வழங்கப்படும்,' என்றார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE