ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இதில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப் படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 124 பேர் 18 தொகுதிகளில் உள்ள ஜம்முவிலும் மற்ற 172 பேர் 25 தொகுதிகள் உள்ள காஷ்மீரிலும் போட்டியிடுகிறார்கள்.

இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையர் கேகே சர்மா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE