நவ., 29, 1908
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியில், 1908 நவ., 29ம் தேதி பிறந்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்ற, என்.எஸ்.கிருஷ்ணன்.வறுமையால், நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, நாடகக் கொட்டகையில் கடலை மிட்டாய், முறுக்கு விற்பனை செய்தார். பின், படிப்படியாக முன்னேறி, நாடகங்களில் நடித்தார். பல நாடகங்களை எழுதி, இயக்கினார்.சதிலீலாவதி படத்தின் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தார். நகைச்சுவைக்கு என தனி, 'ட்ராக்' எழுதிய முதல் படைப்பாளி, இவர் தான். காந்தியின் தீவிர பக்தரான இவர், தன் ஊரில், காந்தி நினைவுத் துாண் எழுப்பியுள்ளார்.சொந்தக் குரலில், பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னை நாடி வந்தோருக்கு, வாரி வழங்கினார். 1957 ஆக., 30ம் தேதி, தன், 49 வயதில் காலமானார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE