பொது செய்தி

தமிழ்நாடு

கிரிவலப்பாதையை சுத்தப்படுத்த நவீன இயந்திரம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., நிறுவனம் வழங்கியது

Added : நவ 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கோவில், கிரிவலப்பாதையை துாய்மையாக பராமரிக்கும் வகையில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., நிறுவனம், 27.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நவீன இயந்திரத்துடன் கூடிய வாகனத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள, திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது வழக்கம். இதை கருத்தில்
  கிரிவலப்பாதையை சுத்தப்படுத்த நவீன இயந்திரம்   அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., நிறுவனம் வழங்கியது

திருவண்ணாமலை:திருவண்ணாமலை கோவில், கிரிவலப்பாதையை துாய்மையாக பராமரிக்கும் வகையில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., நிறுவனம், 27.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நவீன இயந்திரத்துடன் கூடிய வாகனத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள, திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, 14 கி.மீ., தொலைவுள்ள கிரிவலப்பாதையை துாய்மையாக பராமரிக்கும் வகையில், நவீன இயந்திரம் வழங்க, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த, எஸ்.பி.கே., நிறுவனம் முடிவெடுத்தது.

அதன்படி, 27 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, லாரியில் பொருத்தப்பட்ட நவீன இயந்திரத்தை, மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., குழும நிறுவன தலைவர் செய்யாத்துரை தேவர் நன்கொடையாக வழங்கினார். இந்த வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில், நிறுவன பங்குதாரர் ஈஸ்வரன் முன்னிலையில், கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம், வாகனத்தை நிறுவன மேலாண்மை பங்குதாரர் நாகராஜன் வழங்கினார்.தொடர்ந்து, வாகனத்தை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இந்த வாகனம், ஒரே நேரத்தில் 2 கனமீட்டர் அளவிலான குப்பைகளை சேகரிப்பதோடு, குறுகிய நேரத்தில் சாலைகளில் கிடக்கும் சிறுசிறு கற்கள், மண் மற்றும் துாசுகளை உறிஞ்சி சுத்தம் செய்யும் திறன் கொண்டது. மேலும், கல், மண், துாசு அதிகளவில் உள்ள இடங்களில், நீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளித்து, காற்று மாசு ஏற்படாத வகையில், கிரிவலப்பாதையை சுத்தப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-நவ-202011:26:35 IST Report Abuse
Bhaskaran கோவில் நிர்வாகம் கொஞ்சம் செலவு செய்யணும் வரவு மட்டும் வாங்கி போட்டுக்கொள் இந்த இயந்திர பராமரிப்பாவது அறநிலையத்துறை செய்யுமா அல்லது நன்கொடை கொடுத்தவங்க தான் செய்யணுமா
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
29-நவ-202005:03:54 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த வாகனத்தை நன்கு பராமரிக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X