பொது செய்தி

இந்தியா

ஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம்

Updated : நவ 30, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: 'ஆசியாவிலேயே லஞ்சம் அதிகம் உள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது' என, ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், 'பணம் கொடுத்தால் தான், அரசு சேவைகள் கிடைக்கின்றன' என, இந்தியர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை கண்காணிக்கும் அமைப்புகளில், 'கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி
ஆசியா, இந்தியா, லஞ்சம், அதிகம்

புதுடில்லி: 'ஆசியாவிலேயே லஞ்சம் அதிகம் உள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது' என, ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், 'பணம் கொடுத்தால் தான், அரசு சேவைகள் கிடைக்கின்றன' என, இந்தியர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை கண்காணிக்கும் அமைப்புகளில், 'கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்புக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அமைப்பு சமீபத்தில், ஆசிய நாடுகளில் உள்ள லஞ்ச நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:ஆசிய கண்டத்தில், 17 நாடுகளில் லஞ்ச விவகாரம் பற்றி, 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இவர்களில், 74 சதவீதத்தினர், தங்கள் நாட்டில் நிலவும் ஊழல் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். அரசு அமைப்புகளில் உள்ள ஊழல்களை பெரிய பிரச்னையாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


ஆசிய கண்டத்தில், இந்தியாவில் தான் லஞ்சம் வழங்கி, அரசு சேவைகளை பெற வேண்டிய நடைமுறை மிக அதிகமாக உள்ளது.இந்தியாவில் லஞ்சம் குறித்து, ஜூன், 17 - ஜூலை, 17ம் தேதி வரை, 2,000க்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.'லஞ்சம் வழங்காமல், அரசு சேவைகளை பெற முடியாது; பணிகளை நிறைவேற்ற முடியாது' என, பெரும்பாலானோர் தெரிவித்தனர். இந்தியாவில், 89 சதவீதம் பேர், அரசாங்க ஊழல் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது என, தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுத்தவர்களில், 50 சதவீதம் பேர், லஞ்சம் தரும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், 32 சதவீதம் பேர், சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, கம்போடியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தோனேஷியா, மூன்றாவது இடத்தில் உள்ளது. மாலத்தீவு, ஜப்பான் ஆகிய நாடுகளில் லஞ்ச நடவடிக்கைகள் மிகவும் குறைவாக உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
29-நவ-202022:49:18 IST Report Abuse
g.s,rajan வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு தீர்க்கதரிசி அன்றே சொல்லிவிட்டார் சுதந்திரம் அடைந்து இந்தியா இந்தியர்களின் கையில் சென்ற சமயத்தில் இந்தியா இனி உருப்படாது இந்தியா கயவர்கள் மற்றும் ரௌடிகளின் கையில் சிக்கி சின்னா பின்னமாகி சிதைந்து போகும்,மற்றும் காற்றையும் நீரையும் கூட விலைக்கு வாங்கும் அவலமான மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் பணம் மற்றும் பதவிக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு நாட்டைக் கேவலமான சூழலுக்கு தள்ளி நாசமாக்குவார்கள் என்று பல ஆண்டுகள் முன்பு கூறியது தீர்க்க தரிசனம் தானே,இதில் ஊழல் என்பது இல்லாமல் இருக்குமா ,லஞ்சம் என்பது இல்லாமல் இருக்குமா ??அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவருமே இதற்கு மூல காரணம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
29-நவ-202022:37:26 IST Report Abuse
தத்வமசி செம. இதை அமல் செய்தது மோடி அரசு தான் என்று காங்கிரச்சையும் திமுகவையும் கூற சொல்லுங்கள் பார்க்கலாம். இது பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
29-நவ-202021:45:11 IST Report Abuse
J.Isaac Sriayaar// இந்தியா முழுவதும் இதே நிலமை தானே. அதை ஒத்துக்கொள்ளுங்கள். லஞ்சத்தை ஒழித்துவிட்டோம் என்று மோடி அரசு தம்பட்டம் அடித்தது பொய் தானே. இந்தியா முதலிடம்// வெட்க கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X