அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ.,

Updated : நவ 29, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
தமிழக பா.ஜ., வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இருந்து, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் நேற்று வேல் யாத்திரை மேற்கொண்டார்.தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டத்தினர் சமூக வலை தளங்களில், 'வீடியோ' வெளியிட்டனர்.இதற்கு, தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கருப்பர் கூட்டத்தை
DMK, MLA, Vel Yathirai, வேல் யாத்திரை, திமுக, எம்எல்ஏ,

தமிழக பா.ஜ., வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இருந்து, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் நேற்று வேல் யாத்திரை மேற்கொண்டார்.தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டத்தினர் சமூக வலை தளங்களில், 'வீடியோ' வெளியிட்டனர்.

இதற்கு, தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள், 'குண்டர்' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், கடவுள் முருகனை இழிவுபடுத்துவோருக்கு எதிராக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தி வருகிறார்.


வல்லான் என்ற அரக்கன்


திருத்தணி முருகன் கோவிலில் துவங்கிய இந்த யாத்திரை, அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்திய பின், திருச்செந்துாரில் முடிகிறது. இந்நிலையில், அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், பகுதி செயலர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உட்பட, 50 தி.மு.க., நிர்வாகிகள், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலில் வேலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.பின், அங்கிருந்து அனைவரும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, வேலுடன் யாத்திரை புறப்பட்டு சென்றனர். வல்லான் என்ற அரக்கன், தேவர்களை சித்ரவதை செய்த தாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைப்படுத்தும் வகையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


57 ஆண்டுகள்


வேல் யாத்திரை குறித்து, மோகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 33வது ஆண்டாக யாத்திரை செல்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடந்த, 57 ஆண்டுகளாக சபரிமலைக்கும் மாலை அணிந்து, விரதம் இருந்து, அய்யப்பனை தரிசித்து வருகிறேன்.ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 2,௦௦௦ பக்தர்களுடன் செல்வேன்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு, 50 பேருக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது. வரும், 202௧ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்; கொரோனா தாக்கத்திலிருந்து, உலக மக்கள் விடுபட வேண்டும். புயல் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள வேண்டும். இவை உட்பட, சில வேண்டுதல்களுடன், நானும், மற்றவர்களும் யாத்திரை மேற்கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
30-நவ-202023:05:07 IST Report Abuse
TamilArasan ஈன பயல் உணவிற்கு பதில் என்ன உண்கிறானோ....? இவன் கட்சி தலைமை நம் மத நம்பிக்கையை எவ்வளவு இழிவு படுத்திஉள்ளது என்றாவது தட்டி கேட்டு இருப்பானா....? அப்படி என்றால் பதவிக்காக கட்சி தலைமை என்ன கேட்டாலும் ஏற்பாடு செய்து கொடுக்கும் புரோக்கர் கூட்டம் இந்த கொத்தடிமைகள்...
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
30-நவ-202015:21:45 IST Report Abuse
krishnamurthy செயல் ஆன்மிகம் என்றாலும் கோரிக்கை சரியானதல்ல
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
30-நவ-202014:11:12 IST Report Abuse
sridhar தேச விரோத வேண்டுதலை எல்லாம் முருகன் கண்டுக்க மாட்டாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X