ரஜினி நாளை ஆலோசனை ; போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

Updated : நவ 29, 2020 | Added : நவ 28, 2020 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை : நடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை நடக்கும் மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகள் அனைத்தும் காய் நகர்த்த துவங்கி விட்டன. இந்நிலையில், தன் அரசியல் பிரவேசம் குறித்து,
 மாவட்ட செயலர், ரஜினி, ஆலோசனை

சென்னை : நடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை நடக்கும் மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகள் அனைத்தும் காய் நகர்த்த துவங்கி விட்டன. இந்நிலையில், தன் அரசியல் பிரவேசம் குறித்து, இறுதி முடிவை அறிவிக்காத ரஜினி, நாளை தன் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.


latest tamil news
இதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, நாளை காலை, 9:00 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்கும் ரஜினி, அதன்பின், தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து சென்ற நிலையில், ரஜினியின் இந்த ஆலோசனை அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 50 பேர் பங்ககேற்க உள்ளனர். மாஸ்க் அணியவும் ,சமூக இடைவெளியை பின்பற்றவும், அறிவுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்றுகிறோம். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rksaravanan - Madurai,இந்தியா
30-நவ-202000:09:04 IST Report Abuse
rksaravanan TIMEPASS
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
29-நவ-202022:22:49 IST Report Abuse
Anbuselvan Most probably, he will announce forming and registering a political party. However, it is also expected that he would state that due to paucity of time will not contest elections in the coming assembly elections and will concentrate on local body elections only as he would need time. Will not side or back any party. Generally, state that TN people are intelligent enough to decide to which party to vote.
Rate this:
Cancel
Half Moon - Madurai,இந்தியா
29-நவ-202019:37:42 IST Report Abuse
Half Moon தலீவரே.. இங்க சிஸ்டம் இன்னும் சரியா இல்ல.. ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் அப்பாலிக்கா சரியானா ஆவலாம்.. அப்புறமா நீ அரசியலுக்கு வா தல.. இப்போ இருக்குற குட்டையோ நெட்டேயோ வச்சு சமாளிச்சிக்கிறோம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X