கடல்சார் பாதுகாப்பு கூட்டம் அஜித் தோவல் பங்கேற்பு

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் நடந்த, மூன்று நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பங்கேற்றார்.கடந்த, 2014ல், இந்துமாக் கடல் பகுதி பாதுகாப்பு தொடர்பாக, இந்தியா, இலங்கை, மாலத் தீவு ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டம், டில்லியில் நடந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று, இலங்கையில், இந்துமாக் கடல் பாதுகாப்பு தொடர்பான முத்தரப்புக் கூட்டம்
கடல்சார், பாதுகாப்பு கூட்டம், அஜித் தோவல், பங்கேற்பு

கொழும்பு: இலங்கையில் நடந்த, மூன்று நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பங்கேற்றார்.

கடந்த, 2014ல், இந்துமாக் கடல் பகுதி பாதுகாப்பு தொடர்பாக, இந்தியா, இலங்கை, மாலத் தீவு ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டம், டில்லியில் நடந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று, இலங்கையில், இந்துமாக் கடல் பாதுகாப்பு தொடர்பான முத்தரப்புக் கூட்டம் நடந்தது.


latest tamil news




இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இக்கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு துறை செயலர், கமல் குணரத்னே, மாலத்தீவு பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் பங்கேற்றனர். வங்கதேசம், மொரீஷியஸ், செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்களாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில், இந்துமாக் கடல் எல்லை குறித்த விழிப்புணர்வு, சட்ட விதிகள், தேடல் மற்றும் மீட்பு பயிற்சி, போதை மருந்து கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கடல்சார் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தவும், மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இக்கூட்டம் வழங்கியுள்ளதாக, வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா, இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்தில், ஆதிக்கம் செலுத்த துடிக்கிறது. இந்நிலையில், இந்தியா, இலங்கை, மாலத் தீவு நாடுகளின், கடல்சார் பாதுகாப்பு கூட்டம் நடந்து உள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இக்கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு துறை செயலர், கமல் குணரத்னே, மாலத்தீவு பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் பங்கேற்றனர். வங்கதேசம், மொரீஷியஸ், செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்களாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில், இந்துமாக் கடல் எல்லை குறித்த விழிப்புணர்வு, சட்ட விதிகள், தேடல் மற்றும் மீட்பு பயிற்சி, போதை மருந்து கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-நவ-202005:13:05 IST Report Abuse
NicoleThomson when will Covid Origin Country be destroyed?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X