இந்திய நிகழ்வுகள்
1. ஏ.டி.எம்., இயந்திரம் திருட்டு
ஜல்னா: மஹாராஷ்டிராவின் ஜல்னா நகர் நாகேவாடி பகுதியில், ஒரு வங்கியின் அருகில் உள்ள, ஏ.டி.எம்., மையத்திற்கு நேற்று காலை, மர்ம நபர்கள் சிலர் வந்தனர். ஏ.டி.எம்., இயந்திரத்தை தனியாக பெயர்த்து எடுத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த இயந்திரத்தில், 28.64 லட்சம் ரூபாய் இருந்ததாக, அதிகரிகள் தெரிவித்தனர். இந்த திருட்டில் ஈடுபட்டோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
2. 2 எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.10 கோடி
ஜெய்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ், எம்.எல்.ஏ., மகேந்திரஜித்சிங் மால்வியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் 'வீடியோ'வை, மாநில பா.ஜ., தலைவர் சதீஷ் பூனியா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், 'மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, முதல்வர் அசோக் கெலாட் அரசை ஆதரிக்க, பழங்குடியினர் கட்சியின் இரு எம்.எல்.ஏ.,க்கள் தலா, 10 கோடி ரூபாய் வாங்கினர்' என, மகேந்திரஜித்சிங் கூறுகிறார். ''அசோக் கெலாட்டின் குதிரைபேர அரசியலுக்கு, இந்த வீடியோ ஒரு சான்று,'' என, சதீஷ் பூனியா கூறியுள்ளார்
தமிழகத்தின் நிகழ்வுகள்
1. கோவை அருகே 10 லட்சம் மதிப்புள்ள 2000 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்
கோவை: கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு மற்றும் காந்தி மாநகர் சந்திப்பில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது, டாடா ஏசில் ரூ 10 லட்சம் மதிப்பிலான 2000 கிலோ குட்கா மற்றும் பான்பராக்கினை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
2. பஞ்சலோக சிலை மீட்பு டிரைவர்கள் கைது
சென்னை: மாமல்லபுரத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக பூதேவி சிலையை, வெளிநாட்டவருக்கு விற்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், வெளிநாட்டவர்களிடம், பஞ்ச லோக சுவாமி சிலையை மர்ம நபர்கள் விற்க முற்படுவதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார், ஒரு வாரமாக மாமல்லபுரத்தில் தங்கி, ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.மாமல்லபுரம், ஈ.சி.ஆர்., சாலையில், பக்கிங்ஹாம் கால்வாய் அருகே, நேற்று மாலை சந்தேகப்படும்படி சென்ற, வாடகை காரை மறித்து சோதனையிட்டதில் சிலை கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்களை போலசார் கைது செய்தனர்.
3. காஞ்சிபுரம் ஆபீசில் 'ரெய்டு' ரூ.3.90 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில், விடிய விடிய நடந்த அதிரடி சோதனையில், கணக்கில் வராத, 3.90 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றினர்.காஞ்சிபுரம் அடுத்த, கோட்ராம்பாளையம் தெருவில், உள்ளூர் திட்ட குழும அலுவலகம் உள்ளது. இங்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வீட்டுமனை, கட்டடங்கள் கட்ட அனுமதி, வரைபடங்கள் தயாரித்தல் போன்ற பணிகளுக்கு, அனுமதி பெற வேண்டும்.இதற்காக, இங்குள்ள ஊழியர்கள், லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, அலுவலகத்தில், அதிரடியாக நுழைந்தனர். போலீசார் நடத்திய ரெய்டில் 3.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது

4. கார் டூவீலர் மோதலில் ஒருவர் பலி
பரமக்குடி: நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் தீபக் மற்றும் முருகன் மகன் சரத்குமார், 25, இருவரும் பார்த்திபனுார் அருகே திருமணத்திற்கு சென்றனர்.நேற்று முன்தினம் மாலை டூவீலரில் வீடு திரும்பினர். பாப்பனேந்தல் விலக்கு ரோட்டில், நான்கு வழிச்சாலையில் வந்த கார், டூவீலர் மீது மோதியது.இதில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலை சரத்குமார், 25, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
5. பஸ் மோதி சிறுவன் பலி
சாயல்குடி: சிக்கல் அருகே வல்லக்குளத்தை சேர்ந்தவர் சரவணன் 35, இவர் குடும்பத்தினருடன் கடுகுசந்தை சத்திரத்திற்கு திருமணத்திற்காக வந்துஉள்ளார்.கோயில் எதிர்பக்கம் உள்ள கிழக்குகடற்கரைச்சாலையை இவரது மகன்அர்னிஷ் 4. கடக்கும்போது, சாயல்குடியிலிருந்து ராமேஸ்வரம்சென்ற அரசு பஸ் மோதியதில் சிறுவன் அர்னிஷ் காயமடைந்தார். சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உலக நிகழ்வுகள்
1. துபாய் வந்த இந்தியர் மாயம்
துபாய்: வேலை தேடி துபாய் வந்த இந்தியர் ஒருவர் 20 நாட்களுக்கு மேலாகியும் மாயமாகி உள்ளனர். அமிர்தலிங்கம் (46) இவர் வேலை தேடி கடந்த 8 ம் தேதி துபாய் சென்றார். அவரை தேடி மீட்கும் முயற்சியில் இந்தியாவில் உள்ள அவரது உறவினர்கள் துபாய் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE