பொது செய்தி

இந்தியா

சைக்கிள் சவாரியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ''உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் ஏற்ற சைக்கிள் சவாரியை ஊக்குவிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சைக்கிள் சவாரி' என்ற தலைப்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த கருத்தரங்கில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
cycle ride,good, health, encourage, சைக்கிள் சவாரி, ஊக்குவிக்க வேண்டும், வெங்கையா நாயுடு

புதுடில்லி: ''உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் ஏற்ற சைக்கிள் சவாரியை ஊக்குவிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சைக்கிள் சவாரி' என்ற தலைப்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த கருத்தரங்கில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:சைக்கிள் சவாரி, குறைந்த செலவிலான உடற்பயிற்சி. உடல் ஆரோக்கியம், மாசற்ற சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல வித நன்மைகள், சைக்கிள் சவாரியில் கிடைக்கும். இளைய சமுதாயத்தினர், சைக்கிள் சவாரி செய்ய வேண்டும்.

கொரோனா, நம் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. வாகனப் போக்குவரத்து குறைந்து, சைக்கிளில் சவாரி செய்வதும், நடை பயணமும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்,போக்குவரத்து வசதியற்ற இடங்களில் பயணிக்க, சைக்கிள் உதவுகிறது.


latest tamil news


அதனால், கொள்கைகளை உருவாக்குபவர்களும், நகர்ப்புறங்களை வடிவமைப்போரும், இனி, சைக்கிள் பயணத்திற்கு, தனி பாதையை உருவாக்க வேண்டும்.அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சைக்கிள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நம் நாட்டிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். இந்தியாவில், குறுகிய துாரப் பயணத்திற்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக, சைக்கிளில் பயணம் செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-நவ-202020:09:31 IST Report Abuse
தமிழவேல் முதல்ல நீங்கெல்லாம் முன்னோடிகளா இருங்க. பலநாடுகளில் மந்திரிகள் சைக்கிளில் தான் சட்டசபைக்கு வருகின்றார்கள். இன்னொன்று, வெளிநாட்டிற்கு அடிக்கடி செல்பவர்கள் பார்த்திருக்கவேண்டும். நகரசபையே சைக்கிள்கள் வாடகைக்கு விடுகின்றது. அதற்கான பார்க் ஆங்காங்கு உள்ளன. அதில் தமது வாடிக்கையாளர் நம்பர் படி, வண்டியை எடுத்துக்கொண்டு, போக வேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள பார்க்கில் வண்டியை விட்டு விடலாம். உதாரணமாய்,வேலைக்கு செல்பவர்கள் இதை எடுத்துக்கொண்டு வேலை இடத்தில் விட்டுவிடலாம். மோடிஜி, வெளிநாட்டில் பார்த்திருப்பார்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-நவ-202016:33:52 IST Report Abuse
Malick Raja அடேங்கப்பா.. கண்டுபிடுச்சிட்டாரு.. நாயுடு.. GT நாயுடுவை விட வாழ்த்துக்கள் நாயுடு காரு..
Rate this:
Cancel
29-நவ-202016:26:52 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தீம்கா தல சைக்கிளில்தான் ஊர்வலம் வருகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X