பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை


திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.



latest tamil news




திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும், பார்வதிக்கு, சிவபெருமான் இட பாகம் வழங்கிய நாளை, நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.இதன், முக்கிய நிகழ்ச்சியாக, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும், சிவபெருமான் ஒருவனே, என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில், 'ஏகன், அனேகன்' என்ற பரணி தீபம் ஏற்றப்பட்டது. .


latest tamil news




இதனிடையே அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை அண்ணாமலையார் மலை உச்சிக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது.


latest tamil news






மஹா தீப கொப்பரைக்கு, கோவிலில் சிறப்பு பூஜை செய்து, அண்ணாமலையார் மலை உச்சிக்கு, 20க்கும் மேற்பட்டோர் அதை சுமந்து சென்றனர். மஹா தீபத்துக்கு, 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 500 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம் ஆகியவையும் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news





latest tamil news



இன்று ஞாயிறு மாலை 6 மணியளவில் விழாவின் முத்தாய்ப்பான நிகழ்வான மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையடுத்து 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். எனினும் கொரோனா அச்சம் காரணமாக மகாதீப நிகழ்வின் போது பக்தர்கள் மலையேறவும் கிரிவலம் சுற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
29-நவ-202013:54:29 IST Report Abuse
a natanasabapathy இங்கு குழுமி உள்ளவர்களில் 75 சதவிகிதம் பேர் முகக்கவசம் aniyavillai சமூக இடைவெளியை கடை பிடிக்கவில்லை
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-நவ-202013:34:02 IST Report Abuse
Ramesh Sargam அண்ணாமலையார் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். இன்று மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை. கிரிவலம் செய்ய அனுமதியில்லை. ஆனால் மூவாயிரத்திற்கும் அதிகமாக காவலர்கள். இது தேவையா?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-நவ-202008:48:41 IST Report Abuse
Sampath Kumar தென்டுய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X