பொது செய்தி

தமிழ்நாடு

‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் டிச.,2ம் தேதி அதி கனமழை பெய்யும் எனவும், மாநிலம் முழுவதும் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம்
RedAlert, HeavyRain, Tamilnadu


சென்னை: தமிழகத்தில் டிச.,2ம் தேதி அதி கனமழை பெய்யும் எனவும், மாநிலம் முழுவதும் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் டிச,2ம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் டிசம்பர் 1,2 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆழப்புழை, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: டிச.,1 ல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது


டிச.,2 ம் தேதி:

கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில், அதிகனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.


டிச.,3ம் தேதி


கன்னியாகுமரி, தேனி, தூத்துக்கடி, விருதுநகர் மாவட்டங்களில்,மிக கனமழையான, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
29-நவ-202017:08:10 IST Report Abuse
R S BALA கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில், அப்பறம் அங்கிருந்து ஒரே தாவு தாவி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கண மழை... இது நியாயமா வருண பகவானே ?
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202010:54:57 IST Report Abuse
Ramesh R எல்லாம் நம்ம பிஜேபி முருகன் கைவேலை ..... எப்ப வேல் எடுத்தாலும் மழை வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X