புள்ளி ஒவியத்தில் அசத்தும் மாணவர் சுதர்சன்.

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020
Share
Advertisement
ஒவியங்களில் பல வகைகள் உண்டு.அந்த ஒவியங்களை வரையப்படும் மீடியம்,வண்ணங்களை பயன்படுத்தும் விதம்,ஒவியத்தின் கரு இவைகள்தான் ஒவியங்களின் தன்மையை வெகுவாக வெளிப்படுத்தும். பெயிண்ட், பிரஷ், பென்சில் கொண்டு வரையப்படும் ஒவியங்களை ஏாராளமாக பார்த்திருக்கலாம் ஆனால் புள்ளி ஒவியங்களை அவ்வளவு எளிதில் பார்க்கமுடியாது காரணம் எளிதில் வரைவதற்கு வசப்படாத ஒவிய



latest tamil news


ஒவியங்களில் பல வகைகள் உண்டு.

அந்த ஒவியங்களை வரையப்படும் மீடியம்,வண்ணங்களை பயன்படுத்தும் விதம்,ஒவியத்தின் கரு இவைகள்தான் ஒவியங்களின் தன்மையை வெகுவாக வெளிப்படுத்தும்.



latest tamil news



பெயிண்ட், பிரஷ், பென்சில் கொண்டு வரையப்படும் ஒவியங்களை ஏாராளமாக பார்த்திருக்கலாம் ஆனால் புள்ளி ஒவியங்களை அவ்வளவு எளிதில் பார்க்கமுடியாது காரணம் எளிதில் வரைவதற்கு வசப்படாத ஒவிய வகையாகும் இது.


latest tamil news



மைக்ரோ டிப் எனப்படும் கூர்மையான இங்க் பேனாக்களை கொண்டு ஸ்கெட்ச் செய்யப்பட்ட கோடுகளின் மீது புள்ளிகளாக வைத்து நிரப்பப்படுவதன் மூலம் உருவாவதே புள்ளி ஒவியம்.இந்த ஒவியத்தை வரைய திறமையை விட நிறைய பொறுமை வேண்டும் என்பதால் பெரும்பாலான ஒவியர்கள் இந்த புள்ளி ஒவியத்தின் பக்கம் வருவது இல்லைஆனால் அதையே சவாலாக ஏற்றுக் கொண்டு சின்ன சின்ன புள்ளி ஒவியமாக வரைந்து பயிற்சி பெற்ற மாணவர் ஒருவர் இப்போது மிகப்பெரிய புள்ளி ஒவியம் ஒன்றை வரைந்து சாதனை படைத்துள்ளார்.


latest tamil news



அவர் பெயர் ஆர்.சுதர்சன் சென்னையில் உள்ள எம்.என்.எம்.ஜெயின் ஆர்கிடெக்சர் கல்லுாரியின் மூன்றாமாண்டு மாணவர். சிறு வயது முதலே ஒவியத்தில் ஈடுபாடு உண்டு. இந்த கொரோனா காலத்தை வீணாக்காது ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்,தேசின் அகாடமியின் இயக்குனர் ராஜேந்திரன் ஆலோசனையுடன் 88 மணி நேரம் (ஏழு நாட்கள்) செலவிட்டு 13 அடி உயரம் 14 அடி அகலத்தில் 182 சதுர அடி கனமான பேப்பரில் ஒரு பிரம்மாண்டமான புள்ளி ஒவியத்தை உருவாக்கிவிட்டார்.

எவ்வளவு துயரம் வந்தாலும் பெண்கள் பீனிக்ஸ் பறவையைப் போல உயிர்தெழுவார்கள் என்பதை கருவாக வைத்துக் கொண்டு இவர் வரைந்துள்ள ஒவியம் தற்போது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.ஒவியத்தை பார்த்த ஒவியத்துறை வல்லுனர்கள் புள்ளி ஒவியத்தில் இதுவே இன்றைய தேதிக்கு பிரம்மாண்டமானது ஆகவே இதை விரைவில் கின்னஸ் சாதனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.பெற்றோர் உற்றோர் நண்பர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் தந்து ஊக்கம் மற்றும் உற்சாகம் காரணமாக மாணவர் சுதர்சன் அடுத்து இதைவிட பிரம்மாண்டமாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஒவியத்தை வரைய உள்ளதாக தெரிவித்தார் அவரது எண்:96001 74068.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X